டெல்டா - ஓமிக்ரான்: இரண்டுக்கும் இடையிலான வேறுபாடுகள் என்ன?

ஓமிக்ரான், டெல்டா கொரோனா கிருமி வகைகளுக்கு இடையிலான வேறுபாடு பற்றி கூடுதல் தெளிவு ஏற்பட்டு வருகிறது.

கொவிட்-19 கிருமிப்பரவலுக்கு எதிரான அமைச்சுகள்நிலைப் பணிக்குழு புதன்கிழமை (ஜனவரி 5) அன்று நடத்திய மெய்நிகர் கூட்டத்தில் அந்த வேறுபாடுகள் விளக்கப்பட்டன. அவை பின்வருமாறு:


1. டெல்டா வகையைவிட ஓமிக்ரான் அதிகமாகவும் வேகமாகவும் பரவக்கூடியது.

இவ்வாண்டு அக்டோபர் முதல் நவம்பர் வரை, சிங்கப்பூரில் நாள் ஒன்றுக்கு 3,000 டெல்டா வகைக் கிருமித் தொற்றுச் சம்பவங்கள் ஏற்பட்டன. ஓமிக்ரான் தொற்று இதைவிட பன்மடங்கு உயரக்கூடும்.

ஒரு கட்டத்தில் டெல்டா தொற்று சுமார் ஒரு வாரத்தில் இரட்டிப்பானது. ஆனால் ஓமிக்ரான் தொற்றுச் சம்பவங்கள் ஓர் இரண்டு நாள்களிலேயே இரட்டிப்பாகலாம் என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் கூறினார்.

2. ஓமிக்ரான் தொற்று, டெல்டா வகைக் கிருமித் தொற்றைவிட மிதமாக இருக்கும்.

சிங்கப்பூரில் ஓமிக்ரான் தொற்றியவர்களில் யாரும் இதுவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படவில்லை என்றார் திரு ஓங்.

இதுவே டெல்டா தொற்றாக இருந்தால், சிலர் நிச்சயம் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருப்பர். அவர்களுக்கு உயிர்வாயு தேவைப்பட்டிருக்கும்.

இருப்பினும் அதிகமானவர்களைக் கிருமி தொற்றினால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் உயரக்கூடும்.

3. முழுமையான தடுப்பூசி, குறிப்பாக பூஸ்டர் எனும் கூடுதல் தடுப்பூசி, கடுமையான நோய்த் தொற்றுக்கு எதிராகக் கணிசமான பாதுகாப்பு அளிக்கும்.

ஆனால் ஏற்கெனவே கொவிட்-19 தொற்றியவர்களுக்கு ஓமிக்ரான் தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் என்று சுகாதார அமைச்சின் மருத்துவச் சேவைப் பிரிவுத் தலைவர் கென்னத் மாக் தெரிவித்தார்.

டெல்டா வகையைவிட ஓமிக்ரான் வகைக்கு தடுப்பூசிகளுக்கு எதிர்ப்பாற்றல் குறைவு.

இருப்பினும் தடுப்பூசி போட்டுக்கொள்வதால் நோய் பாதிப்பு குறைகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!