பிரிட்டன்: கொவிட்-19 தொற்றால் 150,000க்கு மேற்பட்டோர் மரணம்

பிரிட்­ட­னில் கொவிட்-19 தொற்­றால் உயி­ரி­ழந்­தோர் எண்­ணிக்கை 150,000ஐத் தாண்­டி­விட்டது.

அமெ­ரிக்கா, பிரே­சில், இந்­தியா, ரஷ்யா, மெக்­சிகோ, பெரு ஆகிய நாடு­க­ளுக்­குப் பிறகு 150,000 கொவிட்-19 மர­ணங்­கள் பதி­வான 7வது நாடு பிரிட்­டன்.

இதன் தொடர்­பில் டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்ள பிரிட்­டிஷ் பிர­த­மர் போரிஸ் ஜான்சன், “கொவிட்-19 தொற்று நம் நாட்­டில் பெரும் உயிர்ச்­சே­தத்தை ஏற்­ப­டுத்­தி­விட்­டது. அந்த எண்­ணிக்கை இன்று (சனிக்­கி­ழமை) 150,000ஐக் கடந்­து­விட்­டது,” என்று கூறி­யுள்­ளார்.

அங்கு கொவிட்-19 தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட 28 நாள்­களுக்­குள் மாண்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 150,057ஐ எட்­டி­விட்­ட­தாக அந்­நாட்டு அரசு தெரி­வித்­துள்­ளது.

இத­னி­டையே, முன்­னில்­லாத அள­வாக பிரிட்­ட­னில் கடந்த வாரம் ஒரு­நாள் தொற்று எண்­ணிக்கை 200,000க்கு­மேல் பதி­வா­னது. அண்­மைய நாள்­க­ளாக அந்த எண்­ணிக்கை சற்று குறை­யத் தொடங்­கி­யுள்­ளது.

கடந்த 24 மணி நேரத்­தில் அங்கு மேலும் 146,390 பேருக்குக் கிரு­மித்­தொற்று உறு­திப்­படுத்­தப்­பட்டது.

இத­னை­ய­டுத்து, குழந்­தை­கள் பள்­ளி­களில் இருக்­கும்­போது கட்­டா­ய­ம் முகக்­க­வ­சம் அணிய வேண்­டும் என்­பது போன்ற புதிய விதி­மு­றை­கள் பிரிட்­ட­னில் அறி­விக்­கப்­பட்­டன.

பெரு­கி­வ­ரும் கிரு­மித்­தொற்­றா­லும் பல­ரும் தனி­மைப்­ப­டுத்­திக்­கொண்டு இருப்­ப­தா­லும் சுகா­தா­ரத் துறை உட்­பட எல்­லாத் துறை­க­ளி­லும் ஆட்­பற்­றாக்­குறை நில­வு­கிறது.

இத­னைத் தொடர்ந்து, மருத்­து­வ­ம­னை­களில் ஊழி­யர்­க­ளுக்கு உதவ தனது படை­யி­னரை அனுப்பு­வ­தாக கடந்த வெள்­ளிக்­கி­ழமை பிரிட்­டிஷ் தற்­காப்பு அமைச்சு அறி­வித்­தது.

முந்­திய கொவிட்-19 தொற்று அலை­க­ளைக் காட்­டி­லும் இப்­போது மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தும் உயி­ரி­ழப்­ப­தும் வெகு­வா­கக் குறைந்­துள்­ளது. தடுப்­பூ­சி­களே இதற்­குக் கார­ணம் என்று கூறப்­ப­டு­கிறது.

இத­னால், கூடு­தல் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளும்­படி பொது­மக்­களை பிரிட்டிஷ் அர­சாங்­கம் வலி­யு­றுத்தி வரு­கிறது.

அங்கு 12 வய­திற்கு மேற்­பட்­டவர்களில் இது­வரை ஏறக்­குறைய 61 விழுக்­காட்­டி­னர் கூடு­தல் தடுப்­பூசி போட்­டுக்­கொண்டு­விட்­ட­னர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!