இந்தியாவில் 500,000 கொவிட்-19 மரணங்கள்

இந்­தி­யா­வில் மர­ண­ம­டைந்த கொவிட்-19 நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை 500,000ஐத் தாண்­டி­யுள்­ளது. இந்த எண்­ணிக்­கையை சென்ற ஆண்டே இந்­தியா தொட்­டு­விட்­டது என்று பல வல்­லு­நர்­கள் கரு­து­கின்­ற­னர். கிரு­மித்­தொற்­றுக்கு ஆளாகி மர­ண­மடைந்­தோ­ரின் எண்­ணிக்கை தெரி­விக்­கப்­பட்­ட­தை­விட மிக­வும் அதி­கம் என்­பது அவர்­க­ளின் கருத்து.

மர­ண­ம­டைந்­தோ­ரின் எண்­ணிக்­கை­யைக் கணிக்­கும் கருத்­தாய்­வு­க­ளின் முடிவு­கள் உண்­மை­யான நில­வ­ரத்தை எடுத்­துக்­காட்­ட­வில்லை என்று சில வல்லு­நர்­கள் கூறு­கின்­ற­னர். சென்ற ஆண்டு ஜூலை மாதத்­தி­லேயே இந்­தி­யா­வின் கொவிட்-19 மரண எண்­ணிக்கை 400,000ஐத் தொட்­டது.

"நாங்­கள் 'ஜர்­னல் சையன்ஸ்'ஸில் வெளி­யிட்ட ஆய்­வின் முடி­வு­க­ளின்­படி 2021ஆம் ஆண்டு நடுப்­ப­கு­தி­யில் இந்­தி­யா­வில் கொவிட்-19 மரண எண்­ணிக்கை மூன்று மில்­லி­யன் என்று கணிக்­கப்­பட்­டுள்­ளது," என்று அக­ம­தாபாத்­தில் உள்ள இந்­திய நிர்­வா­கக் கழ­கத்­தின் துணை பேரா­சி­ரி­யர் சின்­மய் தும்பே கூறி­னார். இந்த ஆய்வை அவர் இணைந்து நடத்தி­ய­தாக ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­தது.

சென்ற மாதம் இந்­திய அர­சாங்­கம் இந்த ஆய்வை நிரா­க­ரித்­தது. ஆய்வு உண்­மை­யான நில­வ­ரத்­தைத் தெரி­யப்­படுத்­த­வில்லை என்­றும் பிறப்பு, இறப்பு விகி­தத்­தைக் கணக்­கிட தர­மான முறை நடப்­பில் இருப்­ப­தா­க­வும் இந்­திய அர­சாங்­கம் கூறி­யது.

இந்­தி­யா­வின் மாநி­லங்­களில் உள்ள வட்­டா­ரங்­களில் கொவிட்-19க்குப் பலி­யா­னோ­ரின் எண்­ணிக்கை கணக்­கி­டப்­படும். அந்த எண்­ணிக்­கை­யைக் கொண்டு ஒரு மாநி­லத்­தில் பதி­வா­கும் மரண எண்­ணிக்கை நிர்­ண­யிக்­கப்­படும்.

கடந்த சில மாதங்­க­ளாக பல மாநிலங்­களில் மர­ண­ம­டைந்த கொவிட்-19 நோயா­ளி­க­ளின் எண்­ணிக்­கை பதிவு­செய்து வரப்படுகிறது.

இந்­தி­யா­வின் உச்­ச­நீ­தி­மன்­றத்­தின் நெருக்­கு­த­லைத் தொடர்ந்து மாநி­லங்­கள் அவ்­வாறு செய்­கின்­றன.

இந்தியா தற்போது தனது மூன்றாவது கொவிட்-19 அலையை எதிர்கொண்டு வருகிறது. சமூக அளவில் கிருமி பரவத் தொடங்கிவிட்டதாக சில முன்னணி வல்லுநர்கள் கூறுகின்றனர். எனினும், கிருமித்தொற்றுக்கு ஆளான பலருக்கு நோய்க்கான அறிகுறிகள் மோசமாக இல்லை என்று அரசாங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கொவிட்-19 பரி­சோ­தனை விதி­மு­றை­களை இந்­திய அர­சாங்­கம் சென்ற மாதம் தளர்த்­தி­யது. கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­னோ­ரு­டன் நெருங்­கிய தொடர்­பு­டை­யோ­ருக்­குப் பரி­சோ­த­னை­களை மேற்­கொள்­ளத் தேவை­யில்லை என்­றும் அறி­விக்­கப்­பட்­டது. வய­தா­ன­வர்­கள், இதர மருத்­து­வப் பிரச்­சி­னை­கள் இருப்­ப­வர்­கள் ஆகி­யோர் இதற்கு விதி­வி­லக்கு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!