இந்திய இசைக்குயில் லதா மங்கேஷ்கர் காலமானார்

இந்தி திரையுலகின் புகழ்பெற்ற மூத்த பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார். அவருக்கு வயது 92.

லதா மங்கேஷ்கருக்கு சில வாரங்களுக்கு முன்னர் கொவிட்-19 தொற்று ஏற்பட்டது. அவர் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு செயற்கை உயிர்வாயுக் கருவி பொருத்தப்பட்டிருந்தது.

அவர் உடல்நலம் சற்று சீரடைந்த வந்த நிலையில் சனிக்கிழமை (பிப்ரவரி 5) அன்று, மீண்டும் கவலைக்கிடமானது. அவருக்கு மீண்டும் செயற்கை உயர்வாயுக் கருவி பொருத்தப்பட்டது.

லதா மங்கேஷ்கர் உயிர் நீத்ததாக ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 6) அன்று மருத்துவமனை தெரிவித்தது.

அவரது தங்கை உஷா மங்கேஷ்கர் அத்தகவலை உறுதிப்படுத்தினார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் திரைப்பட நடிகர்களும் அவருக்கு சமூக ஊடகங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கடந்த 1929-ம் ஆண்டு, செப்டம்பர் 28-ம் தேதி, மத்திய பிரதேசத்தின் இந்தூரில் பிறந்தார் லதா மங்கேஷ்கர்.

சுமார் 20க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ள லதா மங்கேஷ்கரை, “இந்தியாவின் இசைக் குயில்” என்று இந்தி ரசிகர்கள் அன்புடன் அழைத்தனர்.

இந்திய அரசாங்கம் வழங்கும் மிக உயரிய 'பாரத ரத்னா' (2001), 'பத்ம விபூஷன்' (1999), 'பத்ம பூஷன்' விருது, (1969) விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

இந்திய திரைப்படத் துறையின் உயரிய தாதாசாகேப் பால்கே விருதுடன் சிறந்த பாடகிக்கான தேசிய விருதுகளைப் பலமுறைப் பெற்றுள்ளார்.

லதா மங்கேஷ்கர் குடும்பத்தில் மூத்தவர்.

அவரது சகோதர சகோதரிகள் மீனா காடிக்கர், ஆஷா போஸ்லே, உஷா மங்கேஷ்கர், ஹிருதயநாத் மங்கேஷ்கர் ஆவர்.

லதாவின் சகோதரி ஆஷா போஸ்லே, இவரைப் போலவே புகழின் உச்சிக்குச் சென்ற இந்தி பாடகி.

லதா மங்கேஷ்கரின் நல்லுடல் மும்பையின் சிவாஜி பூங்காவில் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!