உலகளாவிய கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்ந்ததால் வர்த்தகப் பயணங்கள் அதிகரிப்பு

கொவிட்-19 தொடர்­பான எல்­லைக் கட்­டுப்­பா­டு­கள் உல­கின் பெரும்­பா­லான பகு­தி­களில் அகற்­றப்­பட்­ட­நிலையில் சிங்­கப்­பூ­ருக்­குள் வரும், சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து செல்­லும் வர்த்தகப் பய­ணி­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­கிறது.

இருப்­பி­னும் முழு­மை­யான மீட்­சிக்கு இன்­னும் கொஞ்ச காலம் பொறுத்­தி­ருக்க வேண்­டும் என பல்­வேறு தொழில்­து­றை­யி­னர் தெரி­விக்­கின்­ற­னர்.

சீனா­வின் எல்­லைக் கட்­டுப்­

பா­டு­கள் கடி­ன­மாகி இருப்­பதை அவர்­கள் சுட்­டிக்­காட்­டு­கி­றார்­கள்.

கிரு­மிப் பர­வல் புதிய அலை கார­ண­மாக சீனா­வின் எல்­லை­கள் இன்­னும் முழு­மை­யா­கத் திறக்­கப்­ப­ட­வில்லை. மெய்­நி­கர் நிகழ்­வு­கள் இன்­னும் அங்கு தொட­ரு­கின்­றன.

இருப்­பி­னும், மற்ற நாடு­களில் இருந்து அதி­க­மா­னோர் வரு­கின்­ற­னர். கொள்­ளை­நோய் பர­வத் தொடங்­கி­ய­தற்­குப் பின்­னர் இப்­போ­து­தான் ஆக அதி­க­மான வர்த்­த­கப் பய­ணங்­கள் மேற்­கொள்­ளப்­

ப­டு­வ­தாக வர்த்­த­கப் பயண நிர்­வாக நிறு­வ­ன­மான சிட­பிள்­யூடி தெரி­வித்துள்­ளது.

மேலும், இந்த ஆண்­டின் தொடக்­கப் பகு­தி­யோடு ஒப்­பி­டு­கை­யில் சிங்­கப்­பூ­ரில் இருந்து மேற்­கொள்­ளப்­படும் வர்த்­த­கப் பய­ணங்­க­ளின் எண்­ணிக்கை ஐந்து மடங்கு கூடி­யி­ருப்­ப­தாக இந்­நி­று­வ­னத்­தின் ஆசிய-பசி­பிக் வட்­டார விற்­ப­னைப் பிரி­வுத் தலை­வர் அக்­‌ஷய் கபூர் தெரி­வித்து உள்­ளார்.

அதே­போல சிங்­கப்­பூ­ருக்கு மேற்­கொள்­ளப்­படும் வர்த்­த­கப் பய­ணங்­

க­ளின் எண்­ணிக்கை கிட்­டத்­தட்ட மூன்று மடங்கு அதி­க­ரித்­தி­ருப்­

ப­தா­க­வும் அவர் கூறி­னார்.

ஏப்­ரல்­ மு­தல், கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட எல்லா நாட்­டுப் பய­ணி­க­ளுக்­கும் சிங்­கப்­பூர் அதன் எல்­லை­க­ளைத் திறந்­து ­வி­டு­வ­தாக மார்ச் 24ஆம் தேதி அறி­வித்­தது.

அந்த அறி­விப்­பைத் தொடர்ந்து பய­ணத் துறை முன்­ப­தி­வு­கள் மீட்சி­ கா­ணத் தொடங்­கின.

"மெய்­நி­கர் சந்­திப்­பு­களில் சில நன்­மை­கள் இருந்­த­போ­தி­லும் நேருக்கு நேர் அமர்ந்து பேசு­

வ­தற்கு அது நிக­ரா­காது," என்று வர்த்­த­கப் பய­ணங்­கள் கூடு­வ­தற்­கான கார­ணங்­களை விளக்­கி­ய­போது திரு அக்­‌ஷய் குறிப்­பிட்­டார்.

மற்­றொரு பயண நிறு­வ­னத்­தைச் சேர்ந்த சங்­க­மித்ரா போஸ், இவ்­வாண்­டின் ஏப்­ரல் மாதத்­தில் சிங்­கப்­பூ­ரில் மேற்­கொள்­ளப்­பட்ட வர்த்­த­கப் பய­ணத்­தின் அளவு 2019ஆம் ஆண்­டின் 40 விழுக்­காட்டை நெருங்­கி­ய­தா­கக் கூறி­னார்.

'அமெ­ரிக்­கன் எக்ஸ்­பி­ரஸ் குளோ­பல் பிசி­னஸ் டிரா­வல்ஸ்' நிறு­வ­னத்­தின் சிங்­கப்­பூர், ஹாங்­காங் மற்­றும் தாய்­லாந்து பிரி­வுக்­கான பொது மேலா­ள­ரா­க­வும் துணைத் தலை­வ­ரா­க­வும் உள்­ளார் திரு­வாட்டி சங்­க­மித்ரா.

ஏப்­ரல் மாத பயண வர்த்­த­கம் மற்ற மாதங்­க­ளைக் காட்­டி­லும் அதி­கம் என்­றார் அவர். குறிப்­பாக, இவ்­வாண்­டின் மார்ச் மாதம் வரை­யில் செய்­யப்­பட்ட பயண முன்­ப­தி­வு­கள் 2019ஆம் ஆண்­டின் 20 விழுக்­காடு அளவு மட்­டுமே இருந்­த­தாக அவர் கூறி­னார்.

உல­கின் பெரும்­பா­லான நாடு கள் கொள்­ளை­நோ­யு­டன் வாழும் கட்­டத்­திற்கு வரும் மன­நி­லை­யில் உள்­ள­தா­கக் குறிப்­பிட்ட அவர், இருப்­பி­னும், இடை­யூ­று­களும் நிச்­ச­ய­மற்ற தன்­மை­யும் குறு­கிய காலத்­திற்­குத் தொட­ரக்­கூ­டும் என்­றார்.

சிங்­கப்­பூர் வர்த்­த­கக் கூட்­ட­மைப்­பின் தலைமை நிர்­வா­கி­யான லாம் யி யங், தமது வர்த்­த­கக் குழு­வி­லுள்ள பெரும்­பா­லான உறுப்­பி­னர்­கள் வர்த்­த­கப் பய­ணத்தை மீண்­டும் தொடங்­கு­வ­தில் சுறு­சு­றுப்­பு­டன் இயங்­கி­வ­ரு­வ­தா­கச் சொன்­னார்.

இந்­தக் குழு உறுப்­பி­னர்­கள் சிங்­கப்­பூ­ரில் உள்ள நிறு­வ­னங்­களில் முதல் 20 விழுக்­காட்­டைப் பிர­தி­நி­திக்­கின்­ற­னர்.

இவர்­கள் பெரும்­பா­லும் ஐரோப்பா, அமெ­ரிக்கா மற்­றும் ஆசிய நாடு­க­ளுக்­குப் பய­ண­மா­வ­தாக திரு லாம் கூறி­னார்.

இந்த வர்த்­த­கப் பயண மீட்­சி­யின் வேகம் வரும் மாதங்­க­ளி­லும் தொட­ரும் என்று விமா­னத் தரவு மற்­றும் பகுப்­பாய்வு நிறு­வ­ன­மான ஓஏஜி ஏவி­யே­ஷன் நிறு­வ­னத்­தின் ஆசிய வட்­டா­ரத் தலைமை நிர்­வாகி மயூர் பட்­டேல் கூறி­யுள்­ளார்.

இருப்­பி­னும், பெரு­நி­று­வ­னங்­கள் தங்­க­ளது பய­ணத்­துக்­கான நிதி ஒதுக்­கீட்டை மாற்­றி­ய­மைத்து வரு­வ­தால், சில மாதங்­க­ளுக்­குப் பின்­னர் உல­க­ளா­விய பய­ணங்­க­ளின் எண்­ணிக்­கை­யில் பெரிய மாற்­றம் ஏற்­ப­டாது என்று தாம் கரு­து­வ­தாக திரு பட்­டேல் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!