வடகொரியாவில் கொவிட்-19 கிருமிப் பரவல்; தனிமையில் 187,000 பேர்

வடகொரியாவில் கொவிட்-19 கிருமிப் பரவல்; தனிமையில் 187,000 பேர்

1 mins read
b1e25040-8869-4c9a-bcba-126e991801f0
வடகொரியா தனது ராணுவம் அமைக்கப்பட்டதன் ஆண்டுநிறைவைக் குறிக்கும் வகையில் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி மிகப் பெரும் ராணுவப் பேரணியை நடத்தியது. அதன் மூலம் கொவிட்-19 கிருமி பரவி இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறினர். ஏஎஃப்பி -

வடகொரியாவில் குறைந்தது ஒருவர் கொவிட்-19 தொற்றால் மாண்டுவிட்டார்.

சுமார் 350,000 பேருக்குக் காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாக வடகொரியாவின் அதிகாரத்துவ கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் கூறியது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் நாட்டில் 'அடையாளம் தெரியாத காய்ச்சல் பரவி வருவதாக' கேசிஎன்ஏ தெரிவித்தது.

அந்தக் காய்ச்சல் ஏற்பட்டிருக்கும் சுமார் 187,000 பேர் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக அது சொன்னது.

வடகொரியாவில் கிருமிப்பரிசோதனை செய்வதற்கு போதிய வசதிகளும் வழிகளும் இல்லாததால், உண்மையான தொற்று எண்ணிக்கை வெகு அதிகமாக இருக்கலாம்.

கொவிட்-19 பரவல் தொடங்கியதிலிருந்து வடகொரியத அதன் எல்லைகளை மூடியது.

ஆனால் அது சில மாதங்களுக்கு முன் சீனாவுடனான எல்லையைத் திறந்துவிட்டு இரு நாட்டு வணிகத்துக்கு வழிவிட்டது.

அதன்வழி கிருமி வடகொரியாவுக்குள் வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அதனுடன், கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி வடகொரியாவில் மிகப் பெரும் ராணுவப் பேரணி இடம்பெற்றது.

அதில் பல்லாயிரம் பேர் முகக்கவசங்கள் இல்லாமல் கலந்துகொண்டார்கள்.

அந்த நிகழ்ச்சியின் மூலம் கொவிட்-19 பரவி இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.