இலங்கை: அரசமைக்க திணறுகிறார் ரணில்

இலங்­கை­யில் புதி­தாக பிர­த­மர் பதவியை ஏற்­றுக்­கொண்ட ரணில் விக்­ர­ம­சிங்கே, 73, ஐக்­கிய அர­சாங்கத்தை அமைக்க முடி­யா­மல் திண­று­கி­றார்.

நிதி அமைச்­சர் பொறுப்பை ஏற்க முக்­கி­ய­மான மூத்த எதிர்த்­த­ரப்பு தலை­வர் மறுத்­து­விட்­டார்.

இருந்­தா­லும் புதிய அர­சாங்­கத்தை அமைக்­கத் தனக்­குப் போதிய ஆத­ரவு இருக்­கிறது என்றும் பல அமைச்­சர்­க­ளைத் தான் அணுகி வரு­வ­தா­க­வும் ரணில் நேற்று தெரி­வித்­தார்.

இலங்கை வர­லாறு காணாத அள­வுக்குப் பொரு­ளி­யல் நெருக்­கடி­யில் சிக்கி நொடித்துப் போகும் நிலை­மைக்கு வந்­து­விட்­டது.

பிர­த­மர் பத­வி­யில் இருந்து மகிந்த ராஜ­பக்சே வில­கி­விட்­டார். அதி­பர் கோத்­த­பாய ராஜ­பக்­சே­வும் விலக வேண்­டும், புதிய அர­சாங்கம் அமைய வேண்­டும் என்று தொடர் போராட்­டங்­கள் நடந்து வரு­கின்றன. அவை வன்­செ­யல் போராட்­டங்­களாக மாறி­விட்­டன.

இந்த நிலை­யில், அதி­ப­ரின் கோரிக்­கையை ஏற்று புதிய பிர­த­ம­ரா­க ரணில் பதவி ஏற்­றுக்­கொண்டார். நிதி அமைச்­ச­ராக பதவி ஏற்க வேண்­டும் என்று ரணில் விடுத்த வேண்­டு­கோளை ஹர்ஷா டி சில்வா நிரா­க­ரித்­து­விட்­டார். அர­சாங்­கம் விலக வேண்­டும் என்­பதே தன்­னு­டைய நிலைமை என்­றார் அவர்.

அதி­பர் கோத்­த­பாய ராஜ­பக்­சேவை பத­வி­யில் இருந்து அகற்ற மக்­கள் போராட்­டம் நடந்து வரு­கிறது. அதில் தான் சேரப்­போ­வ­தாக டி சில்வா தெரி­வித்­து­விட்­டார்.

நாடா­ளு­மன்­றத்­தில் ஆகப் புதிய எதிர்க்­கட்­சி­யாக இருக்­கும் எஸ்ஜேபி கட்­சி­யைச் சேர்ந்­த­வர் டி சில்வா என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. அதி­பர் பதவி வில­கா­மல் ஐக்­கிய அர­சாங்­கம் அமைய ஆதரவு அளிப்­பதா, வேண்­டாமா என்­ப­தன் தொடர்­பில் எஸ்­ஜேபி கட்சி இன்­ன­மும் ஒரு முடிவு எடுக்­க­வில்லை.

இத­னி­டையே, பிர­த­ம­ரா­கப் பதவி ஏற்­றுக்­கொண்ட ரணில் விக்­ர­ம­சிங்கே, இலங்கை பிரச்­சினை வரும் மாதங்­களில் இன்­னும் மோச­ம­டை­யக்­கூ­டும் என்­றும் அதைத் தடுக்க அனைத்­து­லக உதவி தேவை என்­றும் குரல்­ கொ­டுத்­தார்.

மக்­க­ளுக்கு மூன்று வேளை உணவு மீண்­டும் கிடைக்­கக்­கூ­டிய ஒரு நிலைக்கு நாடு திரும்ப வேண்டும் என்று அவர் வேண்­டு­கோள் விடுத்­தார்.

இவ்­வே­ளை­யில், முன்­னாள் பிர­த­மர் மகிந்த ராஜ­பக்சே நாட்­டை­விட்டு வெளி­யேற நீதி­மன்­றம் தடை­விதித்து இருக்­கிறது. அவர், இலங்­கை­யின் கிழக்­குப் பகு­தி­யில் உள்ள திரு­கோ­ண­மலை கடற்­ப­டைத் தளத்­தில் பாது­காப்­பாகத் தங்கி இருக்­கி­றார் என்று தகவல்கள் கூறின.

இலங்கை ராணு­வம் ஓர­ளவு அமைதியை நிலை­நாட்டி இருக்­கிறது. ரணில் விக்­ர­ம­சிங்கே மேற்­கத்­திய சுதந்­தி­ர­மான பொரு­ளி­யல் சந்தை ஆத­ர­வா­ளர்.

அவர், அனைத்­து­லக பண நிதி­யம் உள்­ளிட்ட அமைப்­பு­க­ளுடன் நல்ல முறை­யில் பேசி பல­னுள்ள நட­வ­டிக்­கை­களை எடுப்­பார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

பதவி வில­கும்­படி மக்­கள் விடுக்கும் கோரிக்­கையை அதி­பர் இது­நாள் வரை தொடர்ந்து நிரா­கரித்து வரு­கி­றார். புதிய பிரதமர் பதவி ஏற்று புதிய அமைச்­ச­ரவை அமைக்க முயன்று வந்தாலும் தாங்கள் போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை என்று ஆர்ப்பாட்டக் காரர்கள் தெரிவித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!