டெல்லி தீயில் தீயணைப்பு வீரர்கள் உட்பட 27 பேர் கருகி மரணம்

இந்­தி­யத் தலை­ந­கர் புது­டெல்­லி­யில் முண்ட்கா என்­னும் பகு­தி­யில் மூன்று மாடி வணிக வளா­கக் கட்­ட­டத்­தில் வெள்­ளிக்­கி­ழமை மாலை ஏற்­பட்ட தீ விபத்­தில் 27 பேர் கருகி மாண்­டு­விட்­ட­னர்.

பலர் காய­ம­டைந்த நிலை­யில் கட்­ட­டத்­தி­லி­ருந்து 70 பேருக்­கும் மேல் மீட்­கப்­பட்­ட­னர். 29 பேரைத் தேடும் பணி நடை­பெ­று­வ­தாக தீய­ணைப்­புத் துறை அதி­கா­ரி­கள் ேநற்று பிற்­ப­க­லில் கூறி­னர்.

தீ விபத்து நிகழ்ந்த கண்­கா­ணிப்பு கேமரா தயா­ரிக்­கும் கடை­யின் உரி­மை­யா­ளர்­க­ளான ஹரிஷ் கோயல், வருண் கோயல் ஆகி­யோர் கைது செய்­யப்­பட்டு உள்­ள­னர்.

தீத்­த­டுப்பு மற்­றும் எந்­த­வித பாது­காப்பு ஏற்­பா­டு­க­ளை­யும் செய்­யாத கார­ணத்­திற்­காக கட்­டட ஊரி­மை­யா­ள­ரான மணீஷ் லக்ரா தேடப்­பட்டு வரு­கி­றார்.

மாலை 4.40 மணி­ய­ள­வில் கட்­ட­டத்­தின் முதல் தளத்­தில் கண்­கா­ணிப்பு கேமரா தயா­ரிக்­கும் நிறு­வ­னத்­தின் அலு­வ­ல­கத்­தில் தீப்­பற்றி மற்ற பகு­தி­க­ளுக்­குப் பர­வி­ய­தாக முதல்­கட்­டத் தக­வல் கூறி­யது.

இரண்­டா­வது தளத்­தில் சமூக நிகழ்ச்சி ஒன்­றில் பலர் பங்­கேற்­றி­ருந்­த­போது தீ அங்­கும் பர­வி­யது.

மாண்­டோ­ரில் பலர் அந்­தத் தளத்­தில் இருந்­த­வர்­கள் எனக் கூறப்படுகிறது.

கட்­ட­டத்­தின் எல்­லாப் பகு­தி­

க­ளுக்­கும் பரவி கட்­டுக்­க­டங்­கா­மல் எரிந்த தீயை அணைக்க தீய­ணைப்­பா­ளர்­கள் இரவு 10.30 மணி­வரை சுமார் ஆறு மணி நேரம் போரா­டி­ய­தா­க­வும் 30க்கும் மேற்­பட்ட தீய­ணைப்பு வாக­னங்­கள் விரைந்து வந்­த­தா­க­வும் டெல்லி சுகா­தார அமைச்­சர் சத்­யேந்­தர் ஜெயின் கூறி­னார்.

பலி­யா­னோ­ரில் இரு­வர் தீய­ணைப்பு வீரர்­கள் என்று சில ஊட­கங்­கள் தெரி­வித்­தன.

முதல் இரண்டு தளங்களில் சிக்கி இருந்தவர்கள் எல்லோரும் மீட்கப்பட்டுவிட்டனர். மூன்றாவது தளத்தில் சிக்கி இருப்பவர்களைத் தேடி மீட்கும் பணி நேற்று மாலை வரை தொடர்ந்து நடைபெற்றது. அந்தப் பணியில் பெரிய பாரந்தூக்கி வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.

ஆனாலும் உள்ளே இடிபாடுகள் மோசமாக இருப்பதால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டது. தீ விபத்தின் போது மூன்றாவவது தளத்தில் கடுமையான புகை மண்ட லம் சூழ்ந்தது.

12 மணி நேரத்திற்கும் மேலாக இவர்கள் உள்ளேயே இருந்துள்ளனர். இதனால் அவர்களுக்கு மோசமான தீக்காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது.

தேசிய பேரிடர் மீட்புக் குழுவின ரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்

மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­பட்­டோ­ரில் பல­ரின் நிலை கவ­லைக்­கி­ட­மாக இருப்­ப­தால் மரண எண்­ணிக்கை அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்று மருத்­து­வர்­கள் கூறி­னர்.

தீச்­சம்­ப­வம் குறித்து அறிந்த அதி­பர் ராம்­நாத் கோவிந்­தும் பிர­த­மர் நரேந்­திர மோடி­யும் உயி­ரி­ழந்­தோ­ரின் குடும்­பங்­க­ளுக்கு இரங்­கல் தெரி­வித்­த­னர்.

அந்­தக் குடும்­பங்­க­ளுக்கு தலா 2 லட்­சம் ரூபாய் நிவா­ரண உதவி வழங்­கப்­படும் என்று திரு மோடி அறி­வித்­தார்.

விபத்து நிகழ்ந்தது எவ்வாறு என்று டெல்லி காவல்துறை விசா ரித்து வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!