கடல் குப்பை பிரச்சினை: தேசிய உத்தி தொடக்கம்

கட­லில் குப்பை சேரும் பிரச்­சினைக்­குத் தீர்­வு­காணும் முயற்­சி­களை சிங்­கப்­பூர் தீவிரப்­ப­டுத்­து­கிறது. இதற்­காக நேற்று தேசிய உத்­தி செயல்­திட்­டம் ஒன்று தொடங்­கப்­பட்­டது. கட­லில் குப்பை சேரும் பிரச்­சினை பெரி­தாகி வரு­கிறது.

தேசிய சுற்­று­ப்புற வாரி­யம் 2021ல் 10 கடற்­க­ரை­க­ளி­லும் கட­லோ­ரப் பகு­தி­க­ளிலும் பிளாஸ்­டிக் போத்­தல்­கள், நெட்­டி­கள், மரக் கிளை­கள் உள்­ளிட்ட 4,009 டன் கழி­வு­களை அப்­பு­றப்­ப­டுத்­தி­யது.

இந்­தக் கழி­வு­க­ளின் அளவு 2020ஆம் ஆண்­டில் 3,490 டன்­னா­க­வும் 2019ஆம் ஆண்­டில் 3,640 டன்­னா­க­வும் இருந்­தது.

ஒருமுறை பயன்­ப­டுத்­தி­விட்டு கழிக்­கப்­படும் பொருள்­க­ளின் புழக்­கத்­தைக் குறைப்­ப­தற்­கான செயல்­திட்­டங்­கள், கடலோ­ரப் பகுதி­களைத் தூய்­மைப்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­கள், கடல்­வாழ் உயிரினங்­களுக்குக் குப்­பை­க­ளால் ஏற்­ப­டக்­கூ­டிய தாக்­கம் போன்ற பிரச்­சி­னை­கள் தொடர்­பான ஆய்வு உரு­வாக்க முயற்­சி­கள் போன்­ற­வற்­றின் மூலம் சிங்­கப்­பூர் கடல் குப்பை பிரச்­சி­னை­யைச் சமா­ளித்து வந்துள்ளது.

புதி­தாக நேற்று தொடங்­கப்­பட்ட உத்­திக்கு 'தேசிய கடல் குப்பை அகற்று உத்தி செயல்­திட்­டம்' என்று பெயர்.

அதை நீடித்த, நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்சு தொடங்­கி­யது.

கட­லில் இருந்து குப்­பை­களை அகற்­றும் பணியை மேற்­கொண்டு வரும் பல அமைப்­பு­க­ளின் இப்­போ­தைய முயற்­சி­களை அந்த உத்­தி செயல்­திட்­டம் ஒன்று திரட்­டும். கடல் குப்பை பிரச்­சி­னைக்­குத் தீர்வு காண சிங்­கப்­பூர் நடை­மு­றைப்­ப­டுத்­தும் செயல்­களை எல்­லாம் முறைப்­ப­டுத்­தும் முதல் காரி­ய­மாக இந்த உத்தி நடப்­புக்கு வரு­கிறது.

நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற துணை அமைச்­சர் டெஸ்­மண்ட் டான் நேற்­றைய நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்­டார்.

கட­லில் குப்பை சேரும் பிரச்­சி­னையை எல்லா நாடு­களும் எல்லா வட்­டா­ரங்­க­ளுமே எதிர்­நோக்­கு­கின்­றன. இருந்­தா­லும் நாற் புற­மும் கட­லால் சூழப்­பட்ட சிங்­கப்­பூர் போன்ற தீவு நாடு­க­ளுக்கு இந்­தப் பிரச்­சினை, தீர்வு காண­வேண்­டிய முக்­கிய பிரச்­சி­னை­ என்று அவர் தெரி­வித்­தார்.

"கட­லில் சேரும் பிளாஸ்­டிக் கழிவு போன்ற குப்­பை­க­ளைக் குறைப்­பது உயி­ரி­யல் பன்­ம­யத்­திற்கு இன்­றி­ய­மை­யா­தது. அதோடு, நம்­மு­டைய மேம்­பாட்­டிற்­கும் அது தேவை­யான ஒன்று.

"கட­லில் குப்­பை­ சேரு­வ­தால் கடற்­கரை மட்­டு­மின்றி நம்­மு­டைய வாழ்­வி­டச் சூழ­லும் பாதிக்­கப்­படும்," என்று துணை அமைச்­சர் தெரி­வித்­தார்.

தானா மேரா கடற்­க­ரை­யில் நேற்று நடந்த குப்பை அகற்று நிகழ்ச்­சி­யின்­போது தேசிய உத்தி திட்­டம் பற்றி திரு டான் அறி­வித்­தார். அந்த திட்­டத்தை பல அமைப்பு­கள், பேரா­ளர்­க­ளு­டன் கலந்து ஆலோ­சித்து இந்த அமைச்சு உரு­வாக்கி இருக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!