வீவக மறுவிற்பனை வீட்டு விலைகள் தொடர்ந்து 23வது மாதமாக உயர்வு

வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீடுகள் மே மாதத்தில் தொடர்ந்து 23வது மாதமாக உயர்ந்தன.

அதே நேரத்தில் குறைவான வீடுகள் கைமாறின என்று 99.co, எஸ்ஆர்எக்ஸ் ஆகிய சொத்துச் சந்தை இணையத்தளங்கள் தெரிவித்தன.

மே மாதத்தில் பாசிர் ரிஸ்ஸிலும் உட்லண்ட்சிலும் முதன்முறையாக ஒரு மில்லியன் வெள்ளிக்கு அதிகமாக வீடுகள் விற்கப்பட்டன.

உட்லண்ட்ஸ் ஸ்த்ரீட் 83ல், 189 சதுர மீட்டர் அளவுள்ள எக்சகியூட்டிவ் வீடு, 1.04 மில்லியன் வெள்ளிக்கு விற்கப்பட்டது.

அதே போல, உட்லண்ட்ஸ் ஸ்த்ரீட் 81ல், 189 சதுர மீட்டர் அளவுள்ள மற்றொரு எக்சகியூட்டிவ் வீடு, 1.03 மில்லியன் வெள்ளிக்குக் கைமாறியது.

பாசிர் ரிஸ்ஸில் ஸ்த்ரீட் 13ல் உள்ள 189 சதுர மீட்டர் அளவுகொண்ட இரண்டு மாடி எக்சகியூட்டிவ் மேன்‌ஷனட் வீடு 1,138,888 வெள்ளிக்கு விலை போனது.

ஹெண்டர்சன் ரோட்டில் உள்ள ஓர் ஐந்து அறை வீடுதான் இதுவரை ஆக அதிக விலைக்கு விற்கப்பட்ட வீவக மறுவிற்பனை வீடாகும்.

96 ஆண்டு குத்தகைக் காலமும் 113 சதுர மீட்டர் பரப்பளவும் கொண்ட அந்த வீடு, சென்ற மாதம் 1.4 மில்லியன் வெள்ளிக்கு விற்கப்பட்டது.

கடந்த மே மாதத்தில் 30 மறுவிற்பனை வீடுகள் குறைந்தது ஒரு மில்லியன் வெள்ளிக்கு விற்கப்பட்டன.

ஒப்புநோக்க ஏப்ரல் மாதத்தில் 22 வீடுகள் ஒரு மில்லியன் வெள்ளிக்கு மேல் விற்பனை ஆகின.

வியாழக்கிழமை (ஜூன் 9) அளவில், இவ்வாண்டு இதுவரை குறைந்தது 145 வீவக மறுவிற்பனை வீடுகள் மில்லியன் வெள்ளிக்கு மேல் விற்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது மே மாதத்தில் வீவக மறுவிற்பனை வீட்டு விலைகள் 0.5 விழுக்காடு கூடின.

அதே நேரத்தில் விற்பனை ஆன வீடுகளின் எண்ணிக்கை 5 விழுக்காடு குறைந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!