ஊடகம், அரசு இடையே நம்பிக்கை அவசியம்

பொது சுகா­தார நெருக்­க­டி­யின்­போது நம்­பிக்­கை­யை­விட முக்­கி­ய­மா­னது வேறெ­து­வு­மில்லை. கொவிட்-19 கொள்­ளை­நோய் சிரம காலத்­தில் தனிப்­பட்­ட­வர்­க­ளி­டை­யி­லும் அர­சாங்­கம், பொது­மக்­கள் ஆகியோர் இடை­யி­லும் சிங்­கப்­பூர் மித­மிஞ்­சிய நம்­பிக்­கை­யைப் பெற்­றுள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் உள்ள ஊட­கங்­

க­ளின் சரி­யான, கச்­சி­த­மான தக­வல்­கள் இத­னைச் சாத்­தி­யப்­ப­டுத்­தி­ய­தாக தொடர்பு தக­வல் அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ தெரி­வித்து உள்­ளார். அர­சாங்­கம், ஊட­கம் ஆகி­ய­வற்­றுக்கு இடை­யி­லான இது­த­ரப்பு நம்­பிக்கை மற்­றும் மரி­யா­தை­யை­யும் இது உணர்த்­து­கிறது என்று கூறிய அவர், இந்த உறவு ஒரு சுதந்­திர தேச­மாக நாடு உள்­ள­வரை தொடர்ந்து வரும் என்­றார்.

"இந்த இரு­த­ரப்பு உறவு தொடர்ந்து கட்டிக்காக்கப்பட வேண்­டும். ஊடகம், அரசு உறவு நிலைத்­

தி­ருக்­கத் தேவைப்­படும் எல்லா முயற்­சி­களும் எடுக்­கப்­பட வேண்­டும்," என்­றார் திரு­வாட்டி டியோ.

சிங்­கப்­பூர் பத்­தி­ரி­கை­யா­ளர் சங்­கத்­தின் 50வது ஆண்­டு­வி­ழா­வை­யொட்டி நடத்­தப்­பட்ட 'பிரஸ் பால்' விருந்­தில் பங்­கேற்று அவர் பேசி­னார். ஆர்ச்­சர்ட் ஹோட்­ட­லில் நடை­பெற்ற இந்­நி­கழ்­வில் 400க்கும் மேற்­பட்ட ஊடக நிபு­ணர்­களும் அவர்­க­ளின் விருந்­தி­னர்­களும் கலந்­து­கொண்­ட­னர்.

"நாட்டு நிர்­மா­ணத்­தில் உள்­ளூர் ஊட­கங்­கள் வகித்த பங்­கிற்கு அர­சாங்­கம் அளித்த மதிப்­பின் அடிப்­ப­டை­யில் இந்த உறவு கட்டி எழுப்­பப்­பட்­டது. இது நான்­காம் தலை­மு­றைத் தலை­மைத்­து­வத்­

தி­லும் நீடிக்­கும் என்று நான் உறு­தி­யாக நம்­பு­கி­றேன்," என்­றார் அமைச்­சர்.

2021 மே மாதம் தொடர்பு தக­வல் அமைச்சு பொறுப்பை ஏற்ற திரு­வாட்டி டியோ, ஊடக முன்­னேற்­றத்­தில் 4ஆம் தலை­மு­றைத் தலை­வர்­கள் எவ்­வாறு பங்கு வகிக்­க­லாம் என்று விளக்­கி­னார்.

மேலும், கொள்­ளை­நோய் பர­வல் காலத்­தில் அது­தொ­டர்­பான தக­வல்­களை மக்­க­ளுக்கு அர­சாங்­கம் கொண்டு சேர்த்த விதத்­தை­யும் அவர் தெளி­வு­ப­டுத்­தி­னார்.

"ஆக அண்­மைய நில­வ­ரங்­

க­ளை­யும் பொது சுகா­தார நட­

வ­டிக்­கை­க­ளை­யும் விவ­ரிக்க பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்பை அர­சாங்­கம் தொடர்ந்து நடத்­தி­யது. ஊட­கங்­கள் எழுப்­பிய வினாக்­க­ளுக்கு, உள்­ளது உள்­ள­படி அர­சாங்­கம் பதி­ல­ளித்­தது.

"கொள்­ளை­நோ­யின் தொடக்­க காலத்­தில், குறிப்­பாக, 'சர்­கிட் பிரேக்­கர்' எனப்­படும் கொள்­ளை­நோய் முறி­ய­டிப்­புத் திட்­டம் நடப்­பில் இருந்­த­போது அமைச்­சர்­கள் கான் கிம் யோங்­கும் லாரன்ஸ் வோங்­கும் வாரத்­திற்கு மூன்று அல்­லது நான்கு பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்பை நடத்­தி­னார்­கள்.

"எந்­த­வொரு முக்­கிய தக­வ­லும் விடு­பட்­டுப்போகாத அள­வுக்கு அர­சாங்­கம் கொள்­ளை­நோய் தக­வல்­கள் அனைத்­தை­யும் முழு­மை­யா­க­வும் சரி­யா­க­வும் பகிர்ந்­து­கொண்­டது. இது, கொவிட்-19 நில­வ­ரத்­தைச் சரி­யா­க­வும் எளி­தா­கப் புரிந்­து­கொள்­ளும் வகை­யி­லும் ஊட­கங்­கள் வெளி­யிட வழி ஏற்­ப­டுத்­தி­யது.

"அர­சாங்­கம் அறி­வித்த கொள்­கை­கள் தொடர்­பில் மருத்­துவ நிபு­ணர்­க­ளி­டம் ஊட­கங்­கள் நேர்­கா­ணல் நடத்­தின. இவற்­றின் கார­ண­மாக, முகக்­க­வ­சம் அணி­தல், தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளு­தல், சமூக இடை­வெ­ளி­யைக் கடைப்­பி­டித்­தல் போன்ற நடை­மு­றை­களில் மற்ற நாடு­க­ளைப்போல் எந்­த­வொரு கருத்து வேற்­று­மை­யும் இங்கு ஏற்­ப­ட­வில்லை," என்­றார் திருவாட்டி டியோ.

அமைச்சர்: கொள்ளைநோய் காலத்தில் சிறப்பான தகவல் பரிமாற்றம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!