ஒரே சட்டத்தின்கீழ் 1,600 ஊழியர் தங்குவிடுதிகள்

அடுத்த ஆண்டு ஏப்­ரல் 1ஆம் தேதி­யி­லி­ருந்து கிட்­டத்­தட்ட 440,000 வெளி­நாட்டு ஊழி­யர்­கள் இருக்­கும் 1,600 தங்­கு­வி­டு­தி­கள் ஒரே சட்­டத்­தின்­கீழ் வர­வுள்­ளன.

நோய்ப் பர­வலை வேக­மா­கக் கட்­டுப்­ப­டுத்­த­வும் தங்­கு­வி­டு­தி­களில் உள்ள வச­தி­களை தரம் உயர்த்­த­வும் அதி­கா­ரி­க­ளுக்கு இது உத­வி­யாக இருக்­கும் என்று கூறப்­ப­டு­கிறது.

மேலும், ஃபெடா எனப்­படும் வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­வி­டு­திச் சட்­டம் ஏழு அல்­லது அதற்­கும் மேற்­பட்ட சிறிய தங்­கு­வி­டு­தி­க­ளை­யும் உள்­ள­டக்­கும்.

தற்­பே­தைய நிலை­யில் இந்­தச் சட்­டம் 1,000 அல்­லது அதற்­கும் மேற்­பட்ட ஊழி­யர்­க­ளுக்­கான 53 தங்­கு­வி­டு­தி­களை மட்­டுமே உள்­ள­டக்­கு­வ­தாக இருக்­கிறது.

இவற்­றில் மொத்­தம் 256,000 பேர் தங்­கக்­கூ­டிய படுக்கை வச­தி­கள் உள்­ளன.

இதன்­மூ­லம், பெரிய, சிறிய என அனைத்து தங்­கு­வி­டு­க­ளி­லும் வச­தி­கள் மேம்­ப­டுத்­தப்­ப­ட­லாம் என்று கூறப்­ப­டு­கிறது.

எனி­னும், இது உட­ன­டி­யாக சாத்­தி­ய­மில்லை என்­றும் காலப்­போக்­கில் நடக்­கும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஃபெடா சட்­டம் பற்றி நேற்று அறி­வித்த மனி­த­வள அமைச்சு, அந்­தச் சட்­டத்­தின்­கீழ் தங்­கு­விடு­தி­கள் தொடர்­பான உரி­மம், அவற்­றின் அள­வைப் பொறுத்து நான்கு பிரி­வு­க­ளாக பிரிக்­கப்­படும் என்று நேற்று தெரிவித்தது.

நபர் ஒரு­வ­ருக்கு குறைந்­த­பட்ச இட­வ­சதி, ஓர் அறைக்­குள் அதி­க­பட்­ச­மாக எத்­தனை பேர் இருக்­க­லாம், துப்­பு­ரவு மற்­றும் காற்­றோட்ட வசதி, போன்ற அத்­தி­யா­வசிய தர­நி­லை­களை அனைத்து தங்­கு­வி­டு­தி­களும் கொண்­டி­ருக்க வேண்­டும். இதில் பெரிய தங்­கு­வி­டு­தி­க­ளுக்கு, நிர்­வாக அமைப்பு, ஊழி­யர் நலன், பாது­காப்பு போன்ற அம்­சங்­களில் கூடு­தல் விதி­மு­றை­கள் விதிக்­கப்­படும்.

சிறிய தங்­கு­வி­டு­தி­கள், அவை அடுத்த ஆண்டு ஏப்­ரல் மாதம் முதல் புதிய விதி­மு­றை­களை கடைப்­பி­டிக்க வேண்­டு­மென்­றா­லும், தற்­போ­தைய நிலை­யில் அவை தங்­கள் உள்­கட்­ட­மைப்பு வச­தி­களை மேம்­ப­டுத்த வேண்டி இருக்­காது.

உதா­ர­ணத்­திற்கு, ஏழு முதல் 99 படுக்கை வசதி கொண்ட தங்கு­வி­டு­தி­கள் ஊழி­யர்­க­ளின் பாது­காப்பு, சுகா­தா­ரம் ஆகி­ய­வற்றை பாதிக்­கும் வித­மான சம்­ப­வங்­களை அதி­கா­ரி­க­ளி­டம் தெரி­விக்க வேண்­டும்.

அத்­து­டன், தொடர்­பு­க­ளின் தடம் அறிய ஏது­வாக அவை தங்கள் தங்­கு­வி­டு­தி­களில் உள்ள ஊழி­யர்­க­ளின் பட்­டி­யலை மனி­த­வள அமைச்­சி­டம் வழங்க வேண் டும். வர்த்தக ரீதி­யில் செயல்­படும், 100 முதல் 299 படுக்கை வச­தி­கள் உள்ள தங்­கு­வி­டு­தி­கள் தங்­க­ளது நிர்­வாக நடை­மு­றை­கள் குறித்து மனி­த­வள அமைச்­சுக்கு குறிப்­பிட்ட காலக்­கி­ர­மப்­படி அறிக்கை சமர்­பிக்க வேண்­டும்.

இவை போன்ற 2ஆம் பிரிவு தங்­கு­வி­டு­தி­கள் தீய­ணைப்­புப் பயிற்சி, பொது சுகா­தா­ரத்­துக்கு கேடுவிளை­விக்­கும் நோய்த் தொற்றைக் கட்­டுப்­ப­டுத்­தக்­கூ­டிய தடுப்பு நட­வ­டிக்­கை­கள் போன்றவை அடங்­கிய வரை­வுத் திட்­டத்­தை­யும் கொண்­டி­ருக்க வேண்டும்.

300 முதல் 999 படுக்கை வச­தி­கள் கொண்ட மூன்­றாம் பிரிவு தங்­கு­வி­டு­தி­கள் அதி­கா­ரி­கள் உத்­த­ர­வி­டும்­போது போக்­கு­வரத்து கட்­டுப்­பாட்டு அதி­கா­ரி­களை செய­லில் ஈடு­ப­டுத்த வேண்­டும்.

1,000 அல்­லது அதற்­கும் மேலாக படுக்கை வச­தி­கள் கொண்ட தங்­கு­வி­டு­தி­கள், அவை ஃபெடா சட்­டத்­தின்­கீழ் ஏற்­கெனவே நிர்­வ­கிக்­கப்­ப­டு­வ­தால், அவை தொடர்ந்து வழக்­கம்­போல் செயல்­ப­ட­லாம் என்று மனி­த­வள அமைச்சு விளக்­கி­யுள்­ளது.

சிறிய தங்­கு­வி­டு­தி­கள் அடுத்த ஆண்டு ஜன­வரி மாதம் தொடங்கி தற்­கா­லிக உரி­மத்­துக்கு விண்­ணப்­பிக்க வேண்­டும்.

அந்த உரி­மம் இரண்­டாண்­டு­களுக்கு செல்­லு­ப­டி­யா­கும்.

இது ஊழி­யர்­க­ளின் வாழ்க்கைச் சூழலை மேம்­ப­டுத்­தும் பணி­யில் ஒரு முக்­கி­ய­மான படி என்று மனி­த­வள மூத்த துணை அமைச்­சர் கோ போ கூன் தெரி­வித்­தார்.

ஆறு அல்­லது அதற்­கும் குறை­வான ஊழி­யர்­க­ளைக்கொண்ட தங்­கு­வி­டு­தி­கள் 0.2 விழுக்­காடு மட்­டுமே என்று குறிப்பிட்ட மனி­த­வள அமைச்சு, அவை வெளி­நாட்டு ஊழி­யர் வேலைச் சட்­டத்­தின்­கீழ் கண்­கா­ணிக்­கப்­ப­டு­வ­தா­கத் தெரி­வித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!