வீட்டில் தீ விபத்து; ஐவர் மருத்துவமனையில்

ஈசூ­னில் உள்ள வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக (வீவக) புளோக்­கின் ஐந்­தா­வது மாடி வீட்­டில் நேற்­றுக் காலை தீ விபத்து ஏற்­பட்­ட­தைத் தொடர்ந்து, ஐவர் சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர்.

அந்த வீட்­டின் படுக்கை அறை­க­ளி­லி­ருந்து மீட்­கப்­பட்ட அந்த ஐவ­ரும் புகை­யைச் சுவா­சித்­த­னர். அவர்­களில் இரு­வ­ருக்கு லேசான தீக்­கா­யங்­களும் ஏற்­பட்­ட­தாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்புப் படை அதன் ஃபேஸ்புக் பக்­கத்­தில் தெரி­வித்­தது.

அந்த வீட்­டில் பல்­வேறு கூண்டு­களில் இருந்த வெள்­ளெ­லி­களும் மீட்­கப்­பட்­டன.

புளோக் 451 ஈசூன் ரிங் ரோடு எனும் முக­வ­ரி­யில் ஏற்­பட்ட தீச்­சம்­ப­வம் குறித்து காலை 9.50 மணி­ய­ள­வில் தனக்­குத் தக­வல் கிடைத்­த­தாக குடி­மைத் தற்­காப்புப் படை கூறி­யது.

வசிப்­ப­றை­யி­லும் சமை­ய­ல­றை­யின் ஒரு பகு­தி­யி­லும் தீ மூண்­டது. அந்த புளோக்­கின் மூன்­றா­வது முதல் ஏழா­வது மாடி வரை­யில் வசிக்­கும் ஏறக்­கு­றைய 100 குடி­யி­ருப்­பா­ளர்­கள் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக வெளி­யேற்­றப்­பட்­ட­னர்.

வசிப்­ப­றை­யில் இருந்த மின்­சைக்­கி­ளின் மின்­க­ல­னி­லி­ருந்து தீ மூண்­டி­ருக்­க­லாம் என முதற்­கட்ட விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ள­தாக குடி­மைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது.

வீவ­க­வும் நீ சூன் நகர மன்­ற­மும் பாதிக்­கப்­பட்ட குடும்ப உறுப்­பி­னர்­க­ளு­டன் தொடர்­பில் இருப்­பதாக நீ சூன் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டெரிக் கோ தெரி­வித்­தார்.

"தீக்­கி­ரை­யான வீடு துப்­பு­ரவு செய்­யப்­பட்டு விசா­ரணை நடத்­தப்­படும் வேளை­யில், பாதிக்­கப்­பட்ட குடும்­பத்­துக்கு தற்­கா­லிக வசிப்­பி­டத்­துக்கு ஏற்­பாடு செய்ய வீவ­க­வு­டன் நாங்­கள் தொடர்­பில் இருக்­கி­றோம்," என்­றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!