35 பயணிகளை விட்டுச் சென்ற ஸ்கூட் விமானம்

இந்தியாவின் அமிர்தசரஸ் நகரிலிருந்து சிங்கப்பூருக்குச் சென்ற ஸ்கூட் விமானம், 35 பயணிகளை ஏற்றாமல் சென்றது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

குறிப்­பிட்ட நேரத்­துக்கு முன்பே விமா­னம் புறப்­பட்­டுச் சென்­ற­தால் இந்­தச் சிக்­கல் ஏற்­பட்­டது.

இதை­ய­டுத்து இந்­திய போக்­கு­வ­ரத்து ஓழுங்­கு­முறை ஆணை­யம் விசா­ர­ணைக்கு உத்­த­ர­விட்­ட­தைத் தொடர்ந்து இந்­திய சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்து இயக்கு நர் அலுவலகம் சம்­ப­வத்தை விசா­ரித்து வரு­கிறது.

அமிர்­த­ச­ரஸ் விமான நிலை­யத்­தில் 35 பய­ணி­களைத் தவிக்­க­விட்டு முன்­கூட்­டியே அந்த விமா­னம் சிங்­கப்­பூர் புறப்­பட்­டுச் சென்­றது எப்­படி என்று அது கேள்­வி­ எ­ழுப்­பி­யி­ருக்­கிறது.

புதன்­கி­ழமை அன்று அமிர்­த­ ச­ரஸ் விமான நிலை­யத்­தி­லி­ருந்து அந்த ஸ்கூட் விமா­னம் இரவு 7.55 மணிக்­குப் புறப்­ப­டு­வ­தாக நேரம் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

ஆனால் ஐந்து மணி நேரத்­துக்கு முன்பே பிற்­ப­கல் 3.00 மணிக்கே விமா­னம் புறப்­பட்­டுச் சென்­றது. தங்­களை ஏற்­றா­மல் சென்ற 35 பய­ணி­கள் கோபத்­தில் ஆர்ப்­ப­ரித்­துக் கூச்­ச­லிட்­ட­னர். இத­னால் விமான நிலை­யத்­தில் கூச்­ச­லும் குழப்­ப­மும் ஏற்­பட்­டது.

அங்­கி­ருந்த விமான நிலைய அதி­கா­ரி­க­ளி­ட­மும் அவர்­கள் புகார் செய்­த­னர்.

இதை­ய­டுத்து அதி­கா­ரி­கள் தொடர்­பு­கொண்­ட­போது நேரம் மாற்­றம் குறித்து முன்­கூட்­டியே மின் அஞ்­சல் வழி­யாக பய­ணி­ க­ளுக்­குத் தெரி­விக்­கப்­பட்­டது என்று ஸ்கூட் தரப்பு கூறி­ய­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

சிங்­கப்­பூர் நோக்­கிப் புறப்­பட்ட அந்த விமானத்­தில் 280 பய­ணி­கள் பய­ணம் செய்­வ­தாக இருந்­தது. ஆனால் நேர மாற்­றத்­தால் 253 பய­ணி­கள் மட்­டுமே சென்­ற­னர். 30க்கும் மேற்­பட்ட பய­ணி­கள் ஏற்­றிச் செல்­லப்­ப­ட­வில்லை என்று ஏஎன்ஐ செய்தி நிறு­வ­னத்­தி­டம் அமிர்­த­ச­ரஸ் விமான நிலைய இயக்­கு­நர் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரின் மலி­வுக் கட்­டண விமான நிறு­வ­ன­மான ஸ்கூட்­டி­ட­மும் அமிர்­த­ச­ரஸ் விமான நிலை­யத்­தி­ட­மும் இந்த விவ­கா­ரம் குறித்­து இந்­திய சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்து இயக்குர் அலு வலகம் விளக்­கம் கேட்­டுள்­ளது.

முப்­பது பேருக்கு குழு­வா­கப் பதிவு செய்த சுற்­றுப்­ப­யண நிறு­வ­னம் ஒன்று நேர மாற்­றம் குறித்து பய­ணி­க­ளி­டம் தெரிவிக்­க­வில்லை என்று ஏஎன்­ஐ­யி­டம் விமான நிலைய அதி­காரி ஒரு­வர் தெரி­வித்­தார். இதற்கு முன்­ன­தாக இதே போன்ற சம்­ப­வம் பெங்­க­ளூர் விமான நிலை­யத்­தில் அண்­மை­யில் நடந்­தது. டெல்­லியை நோக்­கிச் சென்ற கோ ஃபர்ஸ்ட் விமா­னம் 55 பய­ணி­களை ஏற்­றா­மல் சென்­றது. இம்­மா­தம் 9ஆம் தேதி இந்­தச் சம்­ப­வம் நடந்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!