சீன ஆதரவோடு விமான நிலையம்: கம்போடியாவில் திறப்புவிழா

சியம்ரிப்: கம்போடியாவின் பிரபலமான அங்கோர் வாட் கோயிலிலிருந்து 40 கி.மீ. தூரத்தில் புதிய 3,600 மீ. நீள ஓடுபாதையுடன் விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. பெல்ட் அன்ட் ரோடு திட்டத்தின் அங்கமாக சீனாவின் 1.1 பில்லியன் டாலர் நிதியுதவியோடு அமைக்கப்பட்டுள்ள அந்த நிலையத்தை, கம்போடியப் பிரதமர் ஹுன் மனெட் அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்தார்.

முன்னாள் பிரதமர் ஹுன் சென்னின் தலைமையில் சீனாவுடன் நெருங்கிய உறவை தென்கிழக்காசியாவின் அங்கமான கம்போடியா ஏற்படுத்திக்கொண்டது. அதன் பயனால் பெரும்பான்மையான முதலீடுகளை சீனா அந்நாட்டில் மேற்கொண்டது. தற்போதையப் பிரதமரான ஹுன் சென்னின் மகன், ஹுன் மனெட், சியம் ரீப் அனைத்துலக விமான நிலையம், நவீன வசதிகளைக் கொண்டுள்ளது என்று பாராட்டினார்.

சீனாவின் உலகளாவிய பெல்ட் அன்ட் ரோடு கட்டமைப்புத் திட்டத்தின்படி, கம்போடியாவில் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் இலக்குடன் எழுப்பப்பட்டுள்ள முதல் விமான நிலையம் இதுவாகும்.

கம்போடியாவின் பொருளாதாரத்தை எழுப்பி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, விமான நிலையத்தை வெற்றியுடன் செயல்படச் செய்வது அந்நாட்டு மக்கள் அனைவரின் கடமை என்று பிரதமர் ஹுன் மனெட் கூறினார்.

ஆண்டுக்கு 7 விழுக்காடு வளர்ச்சியுடன் 20 ஆண்டுகளாக அதிவேகமாக உயர்ந்துவந்த பொருளாதாரமாக கிருமித்தொற்றுக்கு முன்னர் கம்போடியா திகழ்ந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!