அமெரிக்காவில் தொடரும் கொரோனாவின் கோர தாண்டவம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் தொடர்ந்து நான்காவது நாளாக கொவிட்-19 கிருமித்தொற்று தொடர்பிலான மரண எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

நேற்றைய நிலவரப்படி, அன்றைய தினம் அங்கு கிருமித்தொற்று எண்ணிக்கை அதற்கு முந்திய நாளைக் காட்டிலும் 77,848 அதிகம் என்றும் மரண எண்ணிக்கை 1,297 என்றும் ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் புளூம்பர்க் நிறுவனம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட தகவல் கூறுகிறது.

அமெரிக்காவின் கலிஃபோர் னியா, டெக்சஸ், ஃபுளோரிடா ஆகிய மாநிலங்களே கிருமித்தொற்றால் ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டவை.

ஃபுளோரிடா, நியூயார்க்கையும் மிஞ்சி ஆக அதிக கிருமித்தொற்றுடைய இரண்டாவது மாநிலமாகத் திகழ்கிறது. முதல் இடத்தில் கலிஃபோர்னியா உள்ளது. சனிக்கிழமையன்று அமெரிக்காவில் புதிதாக 414,511 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. வெள்ளிக்கிழமை கிருமித்தொற்று எண்ணிக்கை 402,312 என்று இருந்தது.

இதற்கிடையே, நியூயார்க்கில் சனிக்கிழமை புதிதாகக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 750 பேருடன் சேர்த்து, அங்கு கிருமித்தொற்று எண்ணிக்கை 411,200. அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை சற்று குறைந்து 646 ஆனது.
ஃபுளோரிடாவில் மரணமடைந்த குடியிருப்பாளர்கள் எண்ணிக்கை 124. அதனையும் சேர்த்து அங்கு மாண்டோரின் எண்ணிக்கை 5,777. நியூயார்க்கில் பத்து மரணங்களே நிகழ்ந்துள்ளன.
கலிஃபோர்னியாவில் சனிக்கிழமையன்று புதிதாக 10,066 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது என்று அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை கூறியது.

தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு அதிகமான மரணங்களைச் சந்தித்த கலிஃபோர்னியாவில் நேற்று முன்தினம் சற்று குறைவாக 151 மரணங்கள் நிகழ்ந்தன. அங்கு மொத்த மரண எண்ணிக்கை 8,337.
கலிஃபோர்னியாவில் இதுவரை மொத்தம் 445,400 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவே அமெரிக்காவில் ஆக உயர்வான எண்ணிக்கை.

சவுத் கரோலினாவில் சனிக்கிழமையன்று புதிய உச்சமாக 74 மரணங்கள் நிகழ்ந்தன. அங்கு 1,368 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின. அதையும் சேர்த்து அங்கு கிருமித்தொற்றின் மொத்த எண்ணிக்கை 79,674. மரண எண்ணிக்கை 1,412.
கென்டக்கி மாநிலத்தில் சனிக்கிழமையன்று 836 புதிய சம்பவங்கள் பதிவாகின. அங்கு கிருமித்தொற்றின் மொத்த எண்ணிக்கை 26,764. இதுவரை அங்கு 696 பேர் மாண்டுவிட்டனர்.

கிருமித்தொற்று சம்பவங்கள் நிலைப்படவில்லை என்றால் அடுத்த இரண்டு வாரங்களில் கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கென்டக்கி மாநில ஆளுநர் எண்டி பெஷியர் கூறியுள்ளார்.

டெக்சஸ் மாநிலத்தில் புதிதாக 6,020 சம்பவங்கள் பதிவாகின. அது முந்தைய நாளின் எண்ணிக்கையான 8,701ஐவிடக் குறைவு.
அம்மாநிலத்தில் கிருமித்தொற்றின் மொத்த எண்ணிக்கை 375,846. சனிக்கிழமையன்று 168 பேர் மாண்டனர். மொத்த மரண எண்ணிக்கை 4,885 என்று மாநில சுகாதாரத்துறை தெரிவித்தது.
அரிஸோனா மாநிலத்தில் 3,748 புதிய சம்பவங்கள் பதிவாகின. அங்கு மொத்தம் 160,041 பேருக்குக் கிருமி தொற்றியுள்ளது.
வெள்ளிக்கிழமை எண்ணிக்கையான 80ஐத் தாண்டி சனிக்கிழமையன்று 144 பேர் மாண்டனர். மொத்த மரண எண்ணிக்கை 3,286 என்றும் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!