ஜப்பான் மக்கள்தொகை வரலாறு காணாத சரிவு

தோக்கியோ: ஜப்பான் மக்கள்தொகை வரலாறு காணாத சரிவு ஏற்பட்டுள்ளது.

இதை அந்நாட்டு அரசாங்கம் புதன்கிழமை தெரிவித்தது. ஜப்பான் அரசாங்கம் பிறப்பு விகிதத்தை சரிவிலிருந்து மீட்டெடுக்கத் திணறி வருகிறது.

பெரும்பாலான வளர்ந்த நாடுகள் பிறப்பு விகிதத்தில் சரிவை எதிர்கொண்டாலும், ஜப்பானின் நிலைமை மிகவும் மோசமாகவுள்ளது. அது தொடர்ந்து 14 ஆண்டுகளாக மக்கள்தொகையில் சரிவைச் சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2021ல் ஜப்பான் மக்கள்தொகை 122,423,038ஆக இருந்தது. அந்த எண்ணிக்கை 2022ஆம் ஆண்டில், 0.65 விழுக்காடு, அதாவது 800,523 குறைந்தது என்று உள்நாட்டு விவகார அமைச்சின் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

முதன்முறையாக, நாட்டின் 47 மாநிலங்களிலும் ஜப்பானியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு நேர்மாறாக, ஜப்பானில் வசிக்கும் வெளிநாட்டு மக்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அது 289,498, அதாவது 10.7 விழுக்காடு அதிகரித்து 2,993,839ஆக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

ஜப்பானின் குடியேற்ற விதிகள் மிகவும் கடினமானவை. ஆனால், தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க அரசாங்கம் படிப்படியாக அவற்றைத் தளர்த்தியது. இது வெளிநாட்டினரின் எண்ணிக்கை ஜப்பானில் அதிகரிக்க ஒரு காரணமாகும்.

“குழந்தைகள் எண்ணிக்கையும் மக்கள்தொகை சரிவும் முக்கியமான பிரச்சினைகள். அது ஜப்பானின் சமூகநலத்தையும் பொருளியலையும் பாதிக்கும்,” என அரசுப் பேச்சாளர் ஹிரோகாசு மாட்சுனோ செய்தியாளர்களிடம் புதன்கிழமை தெரிவித்தார்.

125 மில்லியன் மக்கள் வாழும் ஜப்பானில் 2022ஆம் ஆண்டு 800,000க்கும் குறைவான குழந்தைப் பிறப்புகள்தான் பதிவாகின.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!