'முகக்கவசம் அணிந்திருந்தால் கடைக்குள் அனுமதிக்க வேண்டாம்'

'முகக்கவசம் அணிந்திருந்தால் கடைக்குள் அனுமதிக்க வேண்டாம்'

fallback-0
படம்: ராய்ட்டர்ஸ்

07 Mar 2023 - 5:08 pm

1 mins read

வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்திருந்தால் கடைக்குள் அனுமதிக்க வேண்டாம் என்று அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் அறிவுறுத்தியுள்ளார்.

நியூயார்க் நகரில் கொவிட்-19 நோய்த்தொற்றுக் காலத்தில் இருந்து கடைகளில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

திருட்டுக் குற்றங்களைக் குறைக்கும் நோக்கில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக திரு ஆடம்ஸ் குறிப்பிட்டார்.

முகக்கவசம் அணியாமல் இருந்தால் குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காணமுடியும் என்றார் அவர்.

கடைக்குள் நுழைந்த பிறகு வாடிக்கையாளர்கள் முகக்கவசத்தை அணிந்துகொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.

நியூயார்க் நகரக் காவல்துறையும் முகக்கவசம் அணிந்திருப்போரைக் கடைக்குள் அனுமதிக்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளது.

நோய்த்தொற்றுப் பாதுகாப்பு நடவடிக்கையை சாதகமாகப் பயன்படுத்தி குற்றவாளிகள் முகக்கவசம் அணிந்து திருடுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

குறிப்புச் சொற்கள்