பலூனில் பறந்த 9 பேர் உயிர் தப்பினர்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் அருகேயுள்ள தீபகற்பப் பகுதியில் 9 பேர் கொண்ட குழுவினர் ஒரு பலூனில் பறந்து கொண்டிருந்தனர். அந்த பலூன் கடல் மீது பறந்து கொண்டிருந்தபோது பலத்த காற்று வீசியது. அதனால் அந்த பலூன் நிலை தடுமாறியது. அதில் சென்றவர்கள் உயிரிழக்கும் ஆபத்து ஏற்பட்டது. இந்நிலையில் கடலில் ஒரு படகு சென்று கொண்டிருந்ததைப் பார்த்த பலூன் விமானி, படகு ஓட்டுநருக்கு தகவல் கொடுத்ததும் அப்பகுதிக்கு வந்த அப்படகு அந்த 9 பேரையும் காப்பாற்றியது.

Loading...
Load next