ஆர்லாண்டோ: ‘துப்பாக்கிக்காரன் மிரட்டினான்’

ஆர்லாண்டோ: ஆர்லாண்டோ இரவு கேளிக்கை விடுதியில் நுழைந்து ஒரினச் சேர்க்கையாளர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்ற துப்பாக்கிக்காரன் ஓமர் மட்டீன், 4 பிணையாளிகளுக்கு வெடிகுண்டு கவசங்களை அணி விக்கத் திட்டமிட்டிருந்தான். பேச்சு வார்த்தை நடத்திய போலிசாரிடம் ஓமர், 29, அவ்வாறு கூறியிருந்தான் என்று மேயர் படி டையர் தெரிவித்ததாக நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டது. அந்த சமயத்தில் உள்ளே யிருந்து வந்த தகவல்களும் வெடிகுண்டு சட்டையை பிணை யாளிகளுக்கு அவன் போடப் போகிறான் என்றே தெரிவித்தன. துப்பாக்கிக்காரன் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு அவனது உடல் அருகே பேட்டரி, பை போன்றவை காணப்பட்டன.

இதனால் வெடிகுண்டு வெடிக் கக்கூடிய சாத்தியம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதன் காரணமாக அதிகாரிகள் பல மணி நேரம் காத்திருக்க நேரிட்டது என்று மேயர் பட்டி டையர் குறிப்பிட்டார். கட்டடத்தில் உள்ள உடல்களை அகற்றுவதில் ஏற்பட்ட காலதாமதம் குறித்து அவர் விளக்கினார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கேளிக்கை விடுதியில் துப் பாக்கிக்காரன் சுட்டதில் 49 பேர் கொல்லப்பட்டனர். 53 பேர் காயம் அடைந்தனர். இது, அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத மோசமான படுகொலை சம்பவம் என்று கூறப்படுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கிறைஸ்ட்சர்ச் நகரின் அல் நூர் பள்ளிவாசலின் முன்பு நடைபெற்ற மாபெரும் சிறப்புத் தொழுகையிலும் மௌன அஞ்சலி நிகழ்விலும் பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் முக்காடு அணிந்து பங்கேற்றார். படம்: ராய்ட்டர்ஸ்

23 Mar 2019

நாடளாவிய மௌன அஞ்சலி