பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க தென்கொரியாவில் பலத்த பாதுகாப்பு

சோல்: ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாதிகள் தென்கொரிய மக்களையும் அங்குள்ள அமெரிக்க ரா-ணுவத் தளங்களையும் குறிவைத்து தாக்கக்கூடும் என்று உளவுத் தகவல் கிடைத்திருப்பதைத் தொடர்ந்து அந்நாடு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

உலகெங்கிலும் உள்ள 77 அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் நேட்டோ விமானப்படைத் தளங்கள் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்த ஐஎஸ் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ள தாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக தென்கொரிய உளவுத் துறை தெரிவித்துள்ளது. அத்துடன் 21 நாடுகளில் உள்ள தனிநபர்களைத் தாக்கவும் ஐஎஸ் குழு திட்டமிட்டுள்ளதாக வும் தென்கொரியா கூறியது. தனிநபர் பட்டியலையும் அக்குழு வெளியிட்டுள்ளது.

தென்கொரிய சமூக நல அமைப்பில் பணியாற்றும் ஊழியர் ஒருவரின் பெயரும் அப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதால் தற்போது அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தென் கொரிய அதிகாரி ஒருவர் கூறினார். பயங்கரவாத மிரட்டலை கருத்தில்கொண்டு மக்களைப் பாதுகாக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை அதி கரித் துள்ளதாக தென்கொரியப் பிரதமர் வாங் கியோ தெரி வித்துள்ளார். தென்கொரியா உள்நாட்டில் பாதுகாப்பை வலுப்படுத்தி இருப் பதுடன் துப்பாக்கி கட்டுப் பாடுகளையும் அதிகரித்துள்ளது.

பயங்கரவாதத் தாக்குதலை முறியடிக்க தென்கொரியப் படையினருடன் சேர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வரு வதாக அங்குள்ள அமெரிக்கப் படையினர் தெரிவித்துள்ளனர். உலகெங்கிலும் உள்ள அமெரிக்க விமானத் தளங்களைப் பாது காக்க உரிய நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.