தைவான் முதியோர் இல்லத்தில் தீ: ஐவர் மரணம்; பலர் காயம்

தைப்பே: தைவானில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்று மூண்ட தீயில் அங்கிருந்த முதியவர்களில் ஐந்து பேர் மரணம் அடைந்ததாகவும் மேலும் 29 பேர் காயம் அடைந்ததாகவும் அதிகாரி கள் கூறினர். அங்கு தீ மூண்டதும் உடனடியாக முதியவர்கள் பலர் வேறு இடத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர். பத்து மாடிகளைக் கொண்ட அந்த இல்லத்தின் மூன்றாவது மாடியில் மூவர் இறந்து கிடந்த தாகவும் காயமுற்றிருந்த 31 பேர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தீயணைப்புக் குழுவைச் சேர்ந்த ஒருவர் கூறினார்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களில் இருவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இன்னும் 18 பேர் கடுமையான தீப்புண் காயங் களுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனைப் பேச்சாளர் ஒருவர் கூறினார். தீ மூண்ட செய்தி கிடைத்ததும் உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப் பாளர்கள் அரை மணி நேரத்தில் தீயை அணைத்துவிட்டனர்.

முதியோர் இல்லத்தில் தீ மூண்டதைத் தொடர்ந்து உறவினர் ஒருவர் கதறி அழகிறார். அவருக்கு மற்றவர்கள் ஆறுதல் கூறுகின்றனர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!