இந்தியர் குடியுரிமை விவகாரம் விரைந்து தீர்க்கப்படும்: நஜிப்

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு பிறந்த இந்தியர்கள் எதிர்நோக்கும் குடியுரிமைப் பிரச் சினைகள் இனியும் தாமதிக் காது தீர்த்துவைக்கப்படும் என்று மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் உறுதி தெரிவித்துள்ளார். மலேசிய இந்தியர் காங்கி ரசின் 70வது ஆண்டுக் கொண் டாட்டத்தில் சிறப்பு விருந்தின ராகப் பங்கேற்றுப் பேசிய அவர், இதுவரையில் குடியுரிமை பெறா தவர்கள் தங்களது உரிமையைப் பெற ஏற்பாடு செய்யப்படும் என் றார். இந்தியரின் சமூக=பொரு ளியல் நிலையை உயர்த்துவதற் கான மலேசிய அரசாங்கத்தின் முயற்சிகள் தொடரும் என்று உறுதி அளித்த திரு நஜிப், இது வரை நிறைவேற்றப்பட்ட பணி களைப் பட்டியலிட்டார்.

"கடந்த 2009ஆம் ஆண்டு முதல் இந்திய சமூகத்தின் 26,000 தொழில்முனைவர்க ளுக்கு 844 மில்லியன் ரிங்கிட் உதவித்தொகை அளிக்கப்பட்டு உள்ளது. தமிழ்ப் பள்ளிகளின் உள் கட்டமைப்பை மேம்படுத்த 760 மில்லியன் ரிங்கிட் ஒதுக் கப்பட்டுள்ளது. மேலும் ஏழு தமிழ்ப் பள்ளிகளைக் கட்டும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங் கியுள்ளேன். "நாட்டின் மக்கள்தொகையில் 7.3 விழுக்காட்டினராக இருந்த போதிலும் தேசிய முன்னணியின் விசுவாசமிக்க தோழமைகளுள் ஒன்றாக இந்திய சமூகம் விளங் குகிறது," என்றார் திரு நஜிப். குடியுரிமை பெற கிட்டத்தட்ட 15,000 இந்தியர்கள் காத்திருப்ப தாகக் கூறப்படுகிறது.

ஆண்டுவிழாவில் பிரதமர் நஜிப்புடன் மஇகா இந்நாள், முன்னாள் தலைவர்களும் பிரமுகர்களும். படம்: தி ஸ்டார்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!