நேரடி விவாதத்திற்குப் பிறகு ஹில்லரிக்கு ஆதரவு கூடியது

பெய்ஜிங்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹில்லரி கிளின்டனுக்கும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்பிற்கும் இடையே நியூயார்க்கில் நேற்று நடந்த முதல் சுற்று விவாதத்திற்குப் பிறகு ஹில்லரிக்கு ஆதரவு கூடியுள்ளது. குறிப்பாக அந்த நேரடி விவாதத்தை தொலைக் காட்சி யிலும் ஃபேஸ்புக் போன்ற இணைப் பக்கங்கள் மூலமாகவும் பார்த்த ஆசிய நாட்டவர்கள் பலர் ஹில்லரிக்கு ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டுள்ளனர். அமெரிக்க வரலாற்றிலேயே என்றும் இல்லாத அளவுக்கு 100 மில்லியன் பேர் அந்த நேரடி விவாதத்தைப் பார்த்ததாகக் கூறப்பட்டது. நேற்றைய விவாதத் தில் ஹில்லரி மிகச் சிறப்பாகப் பேசியதாக 62 விழுக்காட்டினரும் டிரம்ப் சிறப்பாகப் விவாதித்ததாக 27 விழுக்காட்டினரும் தெரிவித் திருப்பதாக சிஎன்என் கருத்துக் கணிப்பு கூறுகிறது.

விவாதத்திற்குப் பிறகு ஹில்லரியும் டிரம்பும் கை குலுக்கிக்கொண்டனர். படம்: ஏஎஃப்பி

Loading...
Load next