சில அதிகாரத்தை விட்டுக்கொடுக்க முன்வந்த தென்கொரிய அதிபர்

சோல்: தென்கொரிய அதிபர் பார்க் கியன் ஹைக்கு எதிராக அங்கு போராட்டம் நீடிக்கும் வேளையில் அவர் தனது சில அதிகாரங்களை விட்டுக்கொடுக்க முன்வந்துள்ளார். பிரதமராக பொறுப்பேற்க தகுதியான ஒருவரை நாடாளுமன்றம் பரிந்துரை செய்தால் தான் முன்னதாக பிரதமர் பதவிக்கு முன்மொழிந்த ஒருவரை மீட்டுக்கொள்வதாக திருவாட்டி பார்க் அறிவித்துள்ளார். அத்துடன் புதிய பிரதமர் அமைச்சரவையை அவரது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை அனுமதிக்க தான் தயாராக இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார். திருவாட்டி பார்க்கின் நெருங்கிய தோழி சோய் என்பவர் அரசாங்கத்தில் செல்வாக்கைப் பெருக்கிக்கொள்வததற்கு அனுமதித்தன் பேரில் ஊழலுக்கு வழிவகுத்தாக அவர் மீது புகார்கள் கூறப்படுகின்றன. இதனால் திருவாட்டி பார்க் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!