ஜகார்த்தா ஆளுநருக்கு எதிராக மாபெரும் ஊர்வலம்

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் ஜகார்த்தா ஆளுநர் பசுகி ஜஹஜா புர்னாமாவுக்கு எதிராக ஆயிரக் கணக்கானோர் நேற்று ஊர்வல மாகச் சென்றனர். பள்ளிவாசல்கள் மற்றும் பள்ளிக் கூடங்களில் ஒன்றுகூடிய ஆர்ப் பாட்டக்காரர்கள் மத்திய ஜகார்த் தாவில் உள்ள தேசிய நினைவிடம் வரை ஊர்வலமாகச் சென்றனர். தேசிய நினைவிடத்தில் அமைதியான முறையில் நேற்று நடந்த பேரணியில் 200,000க்கும் அதிகமானோர் கலந்துகொண்ட தாக போலிசார் கூறினர்

ஜகார்த்தா ஆளுநர் பசுகி ஜஹஜா புர்னாமாவுக்கு எதிராக பல இடங்களில் ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று தேசிய நினைவிடம் வரை ஊர்வலமாகச் சென்றனர். அந்த இடத்தில் நேற்று நடைபெற்ற பேரணியில் 200,000க்கும் அதிகமானோர் கலந்துகொண்டதாக போலிசார் கூறினர். கடினப்போக்கு கொண்ட பழமைவாத குழுக்கள் அந்த மாபெரும் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தன. அஹோக் என்றழைக்கப்படும் ஜகார்த்தா ஆளுநர் மீது சமய நிந்தனை தொடர்பில் குற்றம் சாட்டப்பட வேண்டும் என்றும் அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் அந்த குழுக்கள் வலியுறுத்தி வருகின்றன. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!