மலேசியாவுக்கு வேலைக்குச் செல்ல ஊழியர்களுக்கு மியன்மார் தடை

யங்கூன்: மியன்மாரில் உள்ள ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டித்து மலேசியாவில் பிரதமர் தலைமையில்ர மிகப்பெரிய பேரணி நடத்தப்பட்டதைத் தொடர்ந்து மலேசியாவுக்கு மியன்மார் ஊழியர்கள் வேலைக் குச் செல்வதை மியன் மார் அரசு தடை செய்துள்ளது. மலேசியாவுக்கு மியன்மார் நாட்டவர்கள் வேலைக்குச் செல்வது தடை செய்யப்பட்டுள் ளது என்றும் புதிதாக வேலை அனுமதி வழங்குவது நிறுத்தப் பட்டுள்ளது என்றும் அந்நாட்டுக் குடிநுழைவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. புத்த சமயத்தினரைப் பெரும் பான்மையாகக் கொண்ட மியன் மாரில் சிறுபான்மை ரோஹிங்யா முஸ்லிம்கள் நடத்தப்படும் விதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மலேசியாவில் சென்ற வாரம் பேரணி நடந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!