ஃபுளோரிடா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு; ஐவர் பலி

அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள ஃபோர்ட் லாடர்டேல்- ஹாலிவுட் அனைத்துலக விமான நிலையத்தில் இளையர் ஒருவர் கண்மூடித்தனமாகத் துப்பாக்கி யால் சுட்டதில் ஐவர் மரணமடைந் தனர்; எட்டுப் பேர் காயமடைந்தனர். சந்தேக நபரான 26 வயது எஸ்டெபான் சான்டியாகோவை போலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவனுக்கு மனநலப் பிரச்சினை இருப்பதாக வும் வன்முறைச் செயல்களை அரங்கேற்றும்படி தனது மூளையில் குரல்கள் ஒலித்து வந்ததாக அவன் சொன்னதாகவும் கூறப்படுகிறது.

ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளால் அவன் ஈர்க்கப்பட்டானா என இப்போதே சொல்லிவிட முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில், தீவிரவாதம் குறித்த காணொளிகளை அவன் இணையத்தில் பார்த்து வந்ததாகவும் அவர்கள் கூறினர். நேற்று முன்தினம் பிற்பகல் 1 மணியளவில், விமான நிலைய முனையம் 2ல் பயண உடைமைகள் சேகரிக்கும் பகுதியில் இருந்தவர் களை நோக்கி அவன் திடீரெனச் சுடத் தொடங்கினான். இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு அங்குமிங்கும் ஓட, கூச்சலும் குழப்பமும் நிலவியது. குண்டுகள் தீர்ந்ததும் அவன் போலிசாரிடம் சரணடைந்ததாகப் பார்த்தவர்கள் கூறினர்.

சந்தேக நபர் எஸ்டெபான் சான்டியாகோவின் (உள்படம்) துப்பாக்கிச் சூட்டிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்ட போலிசார். படம்: பிபிசி, ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!