மியன்மாரில் படகு விபத்து: திருமண விருந்தினர்கள் 20 பேர் மரணம்

யங்கூன்: திருமண விருந்தி னர்கள் பலர் ஒரு படகில் திரும்பிக்கொண்டிருந்தபோது அப்படகு ஒரு ஆற்றில் தடுப்பு மீது மோதி விபத்துக்கு உள்ளானது. அந்த விபத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததாகவும் இன்னும் பலரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர். விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்றும் கூறப்படுகிறது. யங்கூன் நகரில் பதேன் ஆற்றில் சென்றுகொண்டிருந்த படகு வெள்ளிக்கிழமை இரவு மூழ்கியதாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். விபத்தில் 16 பெண்களும் நான்கு ஆடவர்களும் உயிரிழந்த தாகவும் இன்னும் 9 பேரைக் காணவில்லை என்றும் அந்த வட்டார நாடாளுமன்ற உறுப்பினர் ஆங் து ஹவி கூறினார். விபத்தைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் 30 பேரைக் காப்பாற்றி கரை சேர்த்த தாகவும் அவர் சொன்னார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!