பங்ளாதேஷ் ஆடை தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததில் 10 பேர் பலி

டாக்கா: பங்ளாதே‌ஷில் உள்ள ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை யில் கொதிகலன் வெடித்ததில் 9 ஊழியர்கள் உயிரிழந்ததாகவும் பலர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். தலைநகர் டாக்காவில் உள்ள ஆடை தொழிற்சாலையில் திங்கட் கிழமை எதிர்பாராதவிதமாக கொதிகலன் வெடித்துச் சிதறிய தாகவும் இந்த விபத்தில் பலர் உயிரிழந்ததாகவும் தீயணைப்புப் படை அதிகாரி ஒருவர் கூறினார். பலர் தீ காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளி யிட்டுள்ளனர்.

அந்த தொழிற்சாலை, சுவீடன், டென்மார்க், ஜெர்மனி, ரஷ்யா, ஸ்பெயின், நெதர்லாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு ஆடை ஏற்றுமதி செய்து வருகிறது. டாக்காவில் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன. ஆடை ஏற்றுமதியில் சீனாவிற்கு அடுத்தபடியாக பங்ளாதேஷ் இரண்டாவது இடத் தில் உள்ளது. பல்வேறு நாடு களுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 80% லாபத்தை ஆடை தொழிற்சாலை நிறுவனங்கள் ஈட்டித் தருகின்றன. பங்ளாதே‌ஷில் 2012 ஆம் ஆண்டு ஆடை தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 112 ஊழியர்கள் உயிரிழந்தனர்.