சுடச் சுடச் செய்திகள்

‘ஜோலி’ பெயரின் தனியுரிமையை இழந்த விரைவு உணவகம்

மணிலா: பிலிப்பீன்சின் ஆகப்பெரிய விரைவு உணவக மான ‘ஜோலிபீ’ பல ஆண்டுகள் போராடியும் வெற்றி பெற முடியாமல் ஜோலிவில் என்ற பொழுதுபோக்கு நிறு வனத்திடம் தமது ‘ஜோலி’ என்ற வர்த்தகப்பெயரின் தனியுரிமையை இழந்தது. ‘வறுத்த கோழி’, ‘ஸ்பாஜிடி’ போன்றவற்றுக்கு பிரபலமான ஜோலிபீ உணவகம், 2013ஆம் ஆண்டில் ஜோலிவில் ஹோல்டிங்ஸ் கார்ப்ப ரேஷனின் பெயர் தமது நிறுவனத்தின் பெயரைப் போலவே ஒத்துள்ளது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் ஜோலிவில் நிறுவனத்தைத் தோற்றுவித்த ஜோலி டிங் என்பவரின் பெயர் சூட்டப்பட்டதால் ஜோலிபி உணவகத்தின் தனியுரிமை கோரிக்கை நிராகரிக்கப் பட்டது.

ஜோலிபீ விரைவு உணவகம். படம்: ஏஎஃப்பி