சுடச் சுடச் செய்திகள்

செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு மலேசியத் தேர்தல்

கோலாலம்பூர்: மலேசியாவில் பொதுத்தேர்தல் செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு நடத்தப்படும் என்று மலேசிய துணைப் பிரதமர் அகமட் ஸாஹிட் ஹமிடி கூறினார். ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர், புத்ரா உலக வாணிக மையத்தில் அம்னோவின் ஹரி ராயா பொது வரவேற்பு இல்ல உபசரிப்பின்போது அவர் இதனைத் தெரிவித்தார். பொதுத்தேர்தலை நடத்த பிரதமர் நஜிப் ரசாக்குக்கு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் வரை அவகாசம் உள்ளது. ஆனால், அவர் முன்கூட்டியே தேர்தல் நடத்துவார் என்று பரவலாக ஊகிக்கப்படுகிறது.

இந்நிலையில் தேர்தல் விரை வில் நடத்தப்படும் என்றும் வரும் செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு மலேசியாவின் 14வது பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும் திரு ஸாஹிட் கூறியுள்ளார். அடுத்து வரும் பொதுத் தேர்தலில் மலேசியர்கள் விவேகத்துடன் சிறந்த கட்சியை தேர்ந்தெடுத்து வாக்களிக்க வேண்டும் என்று திரு நஜிப் கேட்டுக்கொண்டார். மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மதுவின் கூட்டணிக் கட்சி ஆபத்தானது என்றும் எந்த வழியில் செல்ல வேண்டும் என்ற நோக்கம் இல்லாத கட்சி என்றும் திரு நஜிப் கூறினார். தேர்தலில் எதிர்க்கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம் மலேசியர் கள் தங்கள் எதிர்காலத்தை ஆபத்து மிக்கதாக ஆக்கிக் கொள்ளக்கூடாது என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon