இந்தியர் பிரச்சினைகளுக்கு 100 நாளில் தீர்வு: எதிர்க்கட்சிக் கூட்டணி வாக்குறுதி

கோலாலம்பூர்: நாடாளுமன்றத் தேர்தலில் வென்று புத்ரா ஜெயா வைக் கைப்பற்றினால் நாடற்ற இந்தியர்களின் பிரச்சினைக்கு நூறு நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று மலேசியாவின் எதிர்க்கட்சிக் கூட்டணியான பக்கத்தான் ஹரப்பான் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது. 194 பக்கங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கையை நேற்று முன் தினம் அக்கூட்டணி வெளியிட் டது. அடுத்த ஐந்தாண்டுகளில் நிறைவேற்றக்கூடிய 60 வாக்குறு திகள் அந்த அறிக்கையில் அடங்கி உள்ளன. அவற்றில் பத்து வாக்குறுதிகளை பதவிப் பொறுப்புக்கு வந்த நூறு நாட் களில் நிறைவேற்றுவோம் என் றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அவ்வறிக்கையின் ஒரு பகுதியில் இந்தியர்களுக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய திட் டங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. "அரசாங்கச் செலவில் ஒரு தமிழ் இடைநிலைப்பள்ளி கட்டு வதற்கு உதவிக்கரம் நீட்டுவது. "பி40 என வகைப்படுத்தப் பட்டுள்ள இந்தியர்கள், முன் னாள் தோட்டத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு குடியிருப்பு வசதி கள் கிடைக்க முன்னுரிமை அளிப்பது," போன்றவை அந்த தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளதாக ஊடகங்கள் குறிப்பிட்டன.

முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது தேர்தல் அறிக்கையை உயர்த்திக் காட்டுகிறார். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!