மலேசிய அமைச்சருக்கு திருமணம்

கோலாலம்பூர்: இவ்வாண்டு மலேசியாவில் மிகப் பெரிய அளவிலான திருமணங்களில் ஒன்றுக்கான தளம் தயாராகிவிட்டது. அடுத்த மாதம் 29ஆம் தேதி எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சர் இயோ பீ யின், 36, சொத்து மேம்பாட்டாளர் 40 வயது லீ இயோவ் செங்கை கரம்பிடிக்கவுள்ளார்.
இவர்களது திருமணத்திற்கான அழைப்பிதழ்கள் சொந்த பந்தங்கள், நண்பர்கள், வர்த்தக மற்றும் அரசியல் தலைவர்களுக்கு ஏற்கெனவே அனுப்பிவைக்கப்பட்டுவிட்டன.
திருமணம் புரியவுள்ள அமைச்சர் இயோ பீ யின் (வலது), சொத்து மேம்பாட்டாளர் லீ இயோ செங். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், ஐஓஐ புராப்பர்ட்டிஸ்