ஸ்பர்ஸ்-மேன்சிட்டி மோதல்

லண்டன்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்தின் காலிறுதி முதல் சுற்று ஆட்டத்தில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர்-மான்செஸ்டர் சிட்டி குழுக்கள் நாளை அதிகாலை மோதவிருக்கின்றன.
ஸ்பர்ஸ் குழு 2011ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாகக் காலிறுதியில் நுழைந்துள்ளது. காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் வலிமையான பொரு ஸியா டோர்ட்மண்ட் குழுவைச் சந்தித்த போதும் ஒட்டுமொத்த கோல் கணக்கில் 4-0 என ஸ்பர்ஸ் வெற்றிபெற்றது.
அக்குழுவின் தலைவரும் கோல் காப்பாளருமான ஹியூகோ லோரிசுக்கு இந்தப் பருவம் சிறப்பானதாக அமைய வில்லை. தமது தவறுகளால் அவர் பல கோல்களை விட்டுக்கொடுத்துள்ளார். ஆனாலும், நிர்வாகி பொக்கெட்டினோ அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து இருக்கிறார்.
அதற்கேதுவாக, ஆட்டத்தின் முதல் நிமிடத்தில் இருந்தே மேன்சிட்டி ஆட்டக் காரர்களுக்குச் சவால் தரக் காத்திருப்ப தாக லோரிஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன், 62,000 பேர் அமர்ந்து பார்க்கும் வசதிகொண்ட தங்களது புதிய அரங்கில் நடக்கும் இந்த ஆட்டத்தில் தாங்கள் வெற்றிபெற ரசிகர்களின் ஆதரவும் அவசியம் என்றார் லோரிஸ்.
இவ்விரு குழுக்களும் கடைசியாக மோதிய மூன்று ஆட்டங்களிலும் மேன் சிட்டியே வெற்றி பெற்றது.
லிவர்பூலின் ஆன்ஃபீல்ட் அரங்கில் நடக்கவிருக்கும் மற்றோர் ஆட்டத்தில் லிவர்பூல்-போர்ட்டோ குழுக்கள் பொருது கின்றன. இந்த ஆட்டத்தில் நான்கு முக்கிய வீரர்கள் இல்லாமல் போர்ட்டோ களமிறங்குவதால் சிறப்பாக விளையாடி வரும் லிவர்பூல் குழுவின் கையே ஓங்கி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!