சுடச் சுடச் செய்திகள்

கலிஃபோர்னிய தம்பதிக்கு 25 ஆண்டு சிறை 

லாஸ் ஏஞ்சலிஸ்: கலிஃபோர்னி யாவில் உள்ள வீட்டுக்குள் சொந்த பிள்ளைகளை அடைத்துவைத்து சித்ரவதை செய்த பெற்றோருக்கு தலா 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
  டேவிட், லூயிஸ் டர்பின் தம்பதி தங்களின்  13 பிள்ளைகளையும்  ஒன்பது ஆண்டுகளாக மோசமாக நடத்தியதை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
25 ஆண்டுகளுக்குப் பிறகு பிணை வழங்கப்படாமல் இருந்தால் இந்தத் தம்பதியர் தங்கள் வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிக்க வேண்டியிருக்கும்.
பெற்றோர் தங்களுக்கு இவ்வளவு கொடுமைகள் செய் திருந்தாலும் தங்களின் தாயையும் தந்தையையும் இன்னும் நேசிப் பதாக டேவிட், லூயிஸ் டர்பின் தம்பதியின் பிள்ளைகள் தெரி வித்துள்ளனர். 
பெற்றோரின் பிடியில் சிக்கியிருந்த  2 வயது முதல் 29 வயது வரையிலான 13 பிள்ளை களும் பல்வேறு சித்ரவதைகளுக்கு உள்ளாகினர்.  பிள்ளைகளுக்கு உணவு கொடுக்காமல் பட்டினி போட்ட நாட்கள் பல. வாரக் கணக்கில் மட்டுமின்றி மாதக் கணக்கில் பிள்ளைகளை அத் தம்பதியர் கட்டிப்போட்டதாகவும் அமெரிக்க அதிகாரிகள் கூறினர். கலிஃபோர்னியாவில் உள்ள  அசுத்தமான வீட்டிலிருந்து 17 வயது மகள் தப்பிச்சென்று போலிசாருக்கு தகவல் கொடுத் ததைத் தொடர்ந்து  2018ஆம் ஆண்டு தொடக்கத்தில் அந்தத்  தம்பதியர் கைது செய்யப்பட்டனர். வெள்ளிக்கிழமை விசாரணையில் சாட்சியமளித்த அத்தம்பதியரின் நான்கு பிள்ளைகள் தங்கள் பெற்றோரை இன்னும் நேசிப்பதாகக் கூறினர்.   
“எங்களை வளர்த்த முறை சிறந்ததாக இல்லாவிட்டாலும் இன்று நாங்கள் வாழ  அது வழிவிட்டிருப்பதாக,” ஒரு  பிள்ளை எழுதியதை அவரின் சகோதரர்  நீதிமன்றத்தில் வாசித்தார். வளரும்போது அனுபவித்த கொடுமைகளை விவரிக்க முடியவில்லை என்று கூறிய மற்றொரு சகோதரர், தற்போது தங்கள் பெற்றோரை நேசிப்பதாகவும் அவர்கள் செய்த கொடுமைகளை மன்னித்து விட்டதாகவும் கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon