பிரிட்டிஷ் அமைச்சரவையில் மூன்று இந்திய வம்சாவளியினர்

லண்டன்: இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக் உட்பட மூன்று இந்திய வம்சாவளியினர்  பிரிட்டிஷ் அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளனர்.

டிசம்பர் 2019 தேர்தலில் போரிஸ் ஜான்சன் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதையடுத்து பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த சஜித் ஜாவித் பதவி விலகினார்.

சஜித் ஜாவித் பதவியில் நீடிக்க வேண்டுமென்றால் தனது 5 ஆலோசகர்களையும் நீக்க வேண்டும் என்று போரிஸ் ஜான்சன் நிபந்தனை வைத்தார். ஜாவித் அந்த நிபந்தனையை ஏற்க மறுத்து பதவி விலகியது பிரிட்டிஷ் அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், போரிஸ் ஜான்சன் தனது அமைச்சரவையில் நேற்று  புதிய மாற்றங்களை அறிவித்தார். அதில் ரிஷி சுனக்கிற்கு நிதியமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. போரிஸ் ஜான்சனின் பிரெக்சிட்டை ரிஷி சுனக் பெருமளவு ஆதரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாம்ப்ஷியரில் பிறந்த இந்திய வம்சாவளியான 39 வயது ரிஷி, பிரிட்டனின் யார்க்‌ஷியர் மாகாணத்தில் உள்ள ரிஷ்மவுண்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராவார். 

இவருக்கும் இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மகள் அக்‌ஷதாவுக்கும் கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

51 வயது அலோக் சர்மா, அமைச்சரவையில் வர்த்தக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்னோர் இந்திய வம்சாவளியினரான 47 வயது பிரித்தி பட்டேல் உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 

Loading...
Load next