நியூயார்க்கை முடக்கும் முடிவு: டிரம்ப் கைவிட்டார்

நியூ­யார்க்: அமெ­ரிக்க அதி­பர் டோனல்ட் டிரம்ப் நியூ­யார்க் மாநி­லத்தை முழு­வ­து­மாக முடக்­கும் முடி­வி­லி­ருந்து பின்­வாங்கி உள்­ளார். அதற்­குப் பதி­லாக கடு­மை­யான பய­ணக் கட்­டுப்­பா­டு­களை விதிக்­கப்­போ­வ­தாக அறி­வித்­துள்­ளார்

அம்­மா­நி­லத்தை முடக்கி வைப்­ப­தற்­கான அவ­சி­யம் ஏற்­ப­ட­வில்லை என்று சனிக்­கி­ழமை தமது டுவிட்­ட­ரில் குறிப்­பிட்­டார். அமெ­ரிக்­கா­வில் கொவிட்-19 கிரு­மித்­தொற்று மர­ணம் 2,200ஐ நெருங்­கிக்­கொண்­டி­ருக்­கும் வேளை­யில் திரு டிரம்ப் இவ்­வாறு கூறி இருக்­கி­றார்.

மரண எண்­ணிக்கை இரண்டு நாட்­களில் இரு­ம­டங்­கானதால் அமெ­ரிக்க மக்­கள் அதிர்ச்­சி­யில் உறைந்­துள்­ள­னர்.

ஒட்­டு­மொத்த அமெ­ரிக்க மாநி­லங்­களில் கிருமி தொற்­றி­யோர் எண்­ணிக்கை 124,000க்கு மேல் அதி­க­ரித்த வண்­ணம் உள்­ள­தால் பாதிக்­கப்­பட்ட நாடு­க­ளின் பட்­டி­ய­லில் முத­லி­டத்­துக்கு அந்­நாடு வந்­துள்­ளது.

ஜன­வரி இறு­தி­வாக்­கில் அமெ­ரிக்­கா­வில் கிருமி பர­வத் தொடங்­கி­ய­போது திரு டிரம்ப் நிலை­யான முடி­வெ­டுக்­கா­மல் முன்­னுக்­குப் பின் முர­ணான கருத்­து­களை வெளி­யிட்டு வந்­தார்.

கிருமி பர­வல் அபா­யத்­தின் அளவை குறைத்து மதிப்­பிட்ட அதே­வேளையில் பர­வலை மெது­வ­டை­யச் செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களில் இறங்­கு­மாறு அமெ­ரிக்­கர்­களை அவர் கேட்­டுக்­கொண்­டார்.

நியூ­யார்க் மாநி­லத்­தில்­தான் அதி­கம் பேர் பாதிக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர். எனவே அதனை முழு­மை­யாக முடக்கி வைக்­கப் போவ­தா­க­வும் அது­பற்றி சிந்­தித்து வரு­வ­தா­க­வும் அதி­பர் கூறி இருந்­தார்.

ஆனால், அந்த முடி­வுக்கு நியூ­யார்க் மாநில ஆளு­நர் ஆண்ட்ரு குவோமோ எதிர்ப்­புத் தெரி­வித்து வந்­தார்.

அண்­மை­யில் சிஎன்­என் தொலைக்­காட்­சிக்கு பேட்­டி­ய­ளித்த அவர், “மாநி­லத்­தின் எல்­லாப் பகு­தி­க­ளை­யும் முடக்­கு­வ­தன் மூலம் நிலைமை கைவிட்­டுப்­போய்­வி­டும். உற்­பத்தி பாதிக்­கப்­படும் என்­ப­தோடு இச்­செ­யல் அமெ­ரிக்­க­ரி­டம் வெறுப்பை ஏற்­ப­டுத்­தும்,” என்று கூறி­யி­ருந்­தார்.

மேலும் ஒரு குறிப்­பிட்ட பகு­தி­யில் ஏரா­ள­மான அமெ­ரிக்­கர்­களை அடைத்து வைக்­கும் அதி­கா­ரம் அதி­ப­ருக்கு உண்டா என்று அவர் கேள்வி எழுப்பி இருந்­தார். ஆளு­ந­ரின் இந்­தக் கருத்து வெளி­யான சில மணி நேரங்­களில் நியூ­யார்க்கை முடக்கி வைக்­கும் தமது முடிவை கைவி­டு­வ­தாக அதி­பர் டிரம்­ப் கூறி­னார்.

அதற்­குப் பதில் கடு­மை­யான பயண அறி­வு­ரையை வெளி­யி­டு­மாறு சிடிசி எனப்­படும் அமெ­ரிக்க தொற்­று­நோய் கட்­டுப்­பாடு மற்­றும் தடுப்பு மையத்­தைக் கேட்­டுக்­கொள்­ளப் போவ­தா­க­வும் அந்த அறி­வு­ரையை மூன்று மாநில ஆளு­நர்­கள் நிர்­வ­கிக்க வேண்டி வரும் என்­றும் திரு டிரம்ப் தெரி­வித்­தார்.

அத­னைத் தொடர்ந்து நியூ­யார்க் மாநில மக்­கள் 14 நாட்­க­ளுக்கு அவ­சி­ய­மற்ற பய­ணங்­க­ளைத் தவிர்க்­கு­மாறு சிடிசி அறிக்கை வெளி­யிட்­டது. பொது சுகா­தா­ரம், போக்­கு­வ­ரத்து மற்­றும் நிதிச் சேவை­கள் போன்ற முக்­கி­ய­மான உள்­கட்­ட­மைப்­புத் தொழில்­க­ளைச் சேர்ந்த ஊழி­யர்­க­ளுக்கு இந்த உத்­த­ரவு பொருந்­தாது என்று அது தெரி­வித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!