அமெரிக்காவில் தொடர்ந்து உச்சமடையும் தொற்று

ஒரே நாளில் 60,000 பேருக்குக் கிருமித்தொற்று

வாஷிங்­டன்: அமெ­ரிக்­கா­வில் கிரு­மிப் பர­வல் தொடர்ந்து அதி­க­ரித்­துக் கொண்­டே­யி­ருக்­கும் நிலையில், அங்கு ஒரே நாளில் 60,000 பேருக்­குத் தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இது ஒரே நாளில் பதி­வான ஆக அதிக எண்­ணிக்­கை­யா­கும் என்­கிறது ராய்ட்­டர்ஸ் புள்­ளி­வி­வ­ரம்.

கிரு­மிப் பர­வல் இருந்­த­போ­தும் பொரு­ளி­யல் நட­வ­டிக்­கை­களை மீண்­டும் தொடங்­கிய சில அமெ­ரிக்க மாநி­லங்­கள் மீண்­டும் கட்­டுப்­பா­டு­களை விதிக்­கத் தொடங்­கி­யுள்­ள­தால் பலர் வேலை இழந்­துள்­ள­னர்.

டெக்­சா­ஸில் 9,500 பேரும் கலி­ஃபோர்­னி­யா­வில் 8,500 பேரும் ஒரே நாளில் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­கி­யுள்­ள­னர். இது அந்த மாநி­லங்­க­ளின் அன்­றாட பாதிப்­பின் ஆக அதிக எண்­ணிக்­கை­யா­கும்.

இந்த நக­ரங்­கள் தவிர தற்­போது டென்­னிசி, மேற்கு வெர்­ஜீ­னியா மற்­றும் உட்டா ஆகிய மாநி­லங்­க­ளி­லும் பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை அதி­க­ரிக்க தொடங்­கி­யுள்­ளன.

அமெ­ரிக்­கா­வின் 50 மாநி­லங்­களில் 42ல் கிரு­மிப் பர­வல் அதி­க­ரித்து வரு­வ­தாக ராய்ட்­டர்ஸ் பகுப்­பாய்வு கூறு­கிறது.

இதற்­கி­டையே, அமெ­ரிக்­கா­வில் தொடர்ந்து இரண்­டா­வது நாளாக 900க்கும் அதி­க­மா­னோர் கிரு­மித்­தொற்­றால் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர். இந்த எண்­ணிக்கை ஜூன் மாதத்­திற்­குப் பிறகு தற்­போது மீண்­டும் அதி­க­ரித்­துள்­ளது.

அமெ­ரிக்­கா­வில் கிரு­மித்­தொற்று கார­ண­மாக இது­வரை 3 மில்­லி­யன் பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர், 132,000 பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர்.

இதற்­கி­டையே, ஒக்­ல­ஹோ­மா­வின் துல்­சா­வில் கடந்த மாதம் அதி­பர் டோனல்ட் டிரம்ப் மேற்­கொண்ட பிரச்­சார பேர­ணியே, அங்கு பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை அதி­க­ரிப்­புக்­குக் கார­ண­மாக இருக்­க­லாம் என்று அந்­ந­க­ரத்­தின் சுகா­தார அதி­காரி ஒரு­வர் தெரி­வித்­தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!