378 பேரில் ஒருவருக்கு தொற்று: அமெரிக்காவில் கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா

அமெ­ரிக்­கா­வில் சோதனை மேல் சோத­னை­யாக நாள்­தோ­றும் கொவிட்-19 பாதிப்பு கூடி வரு­கிறது. மருத்­து­வ­ம­னை­கள் நிரம்பி வழி­கின்­றன.

இந்த நிலை­யில், பழக்கவழக்­கங்­களை மாற்­றிக்­கொண்டு குளிர்­கா­லத்­தைச் சமா­ளிக்க தயா­ரா­கும்­படி அமெ­ரிக்கா முழு­வ­தும் உள்ள மாநில ஆளுநர்­களும் பொது சுகா­தார அதி­கா­ரி­களும் பொது­மக்­க­ளுக்கு அவசர வேண்­டு­கோள் விடுத்து வரு­கி­றார்­கள்.

நாள்­தோ­றும் புதி­தாக ஆயி­ரக்­கணக்­கான மக்­களை கொவிட்-19 கிருமி தொற்­று­கிறது. இது குறைவதாகத் தெரியவில்லை. வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று நாடு முழு­வதும் 181,000க்கும் மேற்­பட்ட மக்­களைக் கிருமி தொற்­றி­விட்­டது. இந்த எண்­ணிக்கை சனிக்­கி­ழமை 121,000 ஆக இருந்­தது.

கிருமி தொற்­று­வோரின் வார சரா­சரி எண்­ணிக்கை 140,000க்கும் அதி­க­மாக இருக்­கிறது. 49 மாநி­லங்­களில் தொற்று அதி­க­ரித்து வரு­கிறது. சுமார் 30 மாநி­லங்­களில் எந்­த­வொரு வாரத்­தி­லும் இல்­லாத அள­வுக்­குச் சென்ற வாரம் தொற்று அதி­க­ரித்­தது.

அமெ­ரிக்­கா­வில் கடந்த வாரத்­தில் 378 பேரில் ஒரு­வ­ர் என்ற அளவில் கிரு­மித்­தொற்று உறு­திப்­படுத்­தப்­பட்டு இருக்­கிறது என்று நியூ­யார்க் நகர ஆளு­நர் ஆண்ட்ரு குமோ தெரி­வித்­தார்.

“330 மில்­லி­யன் மக்­களில் 894,819 பேர் அல்­லது 378 பேரில் ஒரு­வர் பாதிக்­கப்­பட்டு இருக்­கி­றார். முகக்­க­வ­சத்­து­டன் செல்­லுங்­கள்,” என்று அவர் மக்­களை வலி­யு­றுத்­திக் கேட்­டுக்­கொண்­டார்.

கொவிட்-19 கார­ண­மாக கடந்த வாரத்­தில் நாள் ஒன்­றில் 1,000 பேருக்­கும் அதிக மக்­கள் மர­ண­மடைந்­த­னர். இது நாடு முழு­வ­தும் அதிர்ச்சி அலை­க­ளைக் கிளப்­பி­விட்டு இருக்­கிறது.

அமெ­ரிக்­கா­வின் தொற்­று­நோய் வல்­லு­ந­ரான டாக்­டர் ஆண்டனி ஃபாசி, கொவிட்-19 கிரு­மியை மிகக் கடு­மை­யான ஒன்­றா­கக் கரு­தும்­படி அமெ­ரிக்­கர்­க­ளுக்கு மறு­படி­யும் வேண்­டு­கோள் விடுத்­தார்.

எளி­மை­யான சுகா­தார நட­வடிக்கை­களைப் பின்­பற்றி வந்தால் தொற்று குறைந்­து­விடும். மருந்து கண்­டு­பி­டிக்­கப்­படும் வரை மக்­கள் மிக­வும் எச்­ச­ரிக்­கை­யு­டன் நடந்­து­கொள்ள வேண்­டும் என்­றார் அவர்.

அமெ­ரிக்­கா­வில் மொத்­தம் 11,226,218 பேர் பாதிக்­கப்­பட்டு இருப்­ப­தாக நேற்று நண்­ப­கல் நில­வரங்­கள் தெரி­வித்­தன.

கொவிட்-19 தொற்று கார­ண­மாக 251,256 பேர் மாண்­டு­விட்­ட­னர். அந்­தத் தொற்­றில் இருந்து 6,891,031 பேர் குண­ம­டைந்து இருக்­கி­றார்­கள். கொவிட்-19 தொற்றை பொறுத்தவரை உல­கில் அமெ­ரிக்­கா­தான் ஆக அதி­கம் பாதிக்­கப்­பட்ட நாடாக இருக்­கிறது.

அமெ­ரிக்க அதி­பர் தேர்­த­லில் வெற்றி பெற்­றுள்ள ஜன­நா­யக கட்சி வேட்­பா­ளர் ஜோ பைடன், தான் பத­விக்கு வந்­த­தும் முதல் வேலை­யாக கொவிட்-19 கிரு­மியை ஒடுக்­கப் போவ­தா­கச் சூளு­ரைத்துள்ளார்.

முகக்­க­வ­சம் அணி­வதை அவர் கட்­டா­ய­மாக்­கக்­கூ­டும் என்­றும் ஊழி­யர்­க­ளுக்­கும் நிறு­வ­னங்­க­ளுக்­கும் நிதி ஊக்­கு­விப்­பு­களை அவர் அறி­விக்­கக்­கூ­டும் என்­றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இருந்­தா­லும் அவர் வரும் ஜன­வரி 20ஆம் தேதி­தான் பதவி ஏற்­பார் என்­ப­தால், இப்­போ­தைய தொற்று நில­வ­ரம் நீடிக்­கும் பட்­சத்­தில், அதற்­குள்­ளாக மேலும் 8 மில்­லி­யன் பேருக்குத் தொற்று ஏற்­பட்­டு­வி­டும் என்­றும் மேலும் 70,000 பேர் மர­ணம் அடைந்­து­வி­டக்­கூ­டும் என்­றும் ராய்ட்­டர்ஸ் நிறு­வ­னத்­தின் கணக்­கீடு ஒன்று தெரி­விக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!