ஹாங்காங்: கொரோனா பரிசோதனை கட்டாயம்

ஹாங்­காங் அர­சாங்­கம் முதல்­முறை­யா­கத் தனது புதிய அதி­கா­ரத்­தைப் பயன்­ப­டுத்தி கொவிட்-19 பரி­சோ­த­னை­யைக் கட்­டா­ய­மாக்­கி­ உள்­ளது.

முதற்­கட்­ட­மாக, 14 நடன வளா­கங்­க­ளின் வரு­கை­யா­ளர்­க­ளுக்கு அது கொரோனா பரி­சோ­த­னை­யைக் கட்­டா­ய­மாக்கி இருக்­கிறது.

அந்த 14 நடன வளா­கங்­க­ளை­யும் கடந்த சனிக்­கி­ழ­மை­யில் இருந்து வரும் வியா­ழக்­கி­ழமை வரை மூட உத்­த­ர­வி­டப்­பட்­டு இருக்கிறது.

நோய்த் தடுப்பு, கட்­டுப்­பாட்டு (குறிப்­பிட்­டோ­ருக்­குக் கட்­டா­யப் பரி­சோ­தனை) விதி­மு­றை­யின்­கீழ், இம்­மா­தம் 1ஆம் தேதி­யில் இருந்து 21ஆம் தேதி வரை அந்த 14 நடன வளா­கங்­க­ளுக்­குச் சென்ற அனை­வ­ரும் நாளைக்­குள் கட்­டா­ய­மாக கொவிட்-19 பரிசோதனை செய்­து­ கொள்ள வேண்­டும்.

வான் சாய் பகுதியில் உள்ள ஸ்டார்­லைட் நடன மன்­றத்­து­டன் தொடர்­புடைய 32 பேருக்கு இது­வரை கொரோனா தொற்று உறு­தி­செய்­யப்­பட்­டுள்­ளது.

“உள்­ளூ­ரில் கொரோனா பர­வல் நிலைமை மோச­ம­டைந்து வரு­கிறது. நடன நட­வ­டிக்­கை­கள், நடன அரங்­கு­கள் சம்­பந்­தப்­பட்ட ஒரு கிரு­மித்­தொற்­றுக் குழு­மத்­து­டன் தொடர்­பு­டை­ய­வர்­களில் பல­ருக்­கும் அந்­நோய்த்­தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

“அவர்­களில் சில­ரி­டம் கிரு­மித்­தொற்­றுக்­கான எந்த அறி­கு­றி­யும் காணப்­ப­ட­வில்லை. இது, சமூ­கத்­தில் கிரு­மிப் பர­வல் இருப்­ப­தைக் காட்­டு­கிறது,” என்று உணவு, சுகா­தா­ரத் துறைப் பேச்­சா­ளர் ஒரு­வர் நேற்று தெரி­வித்­தார்.

கொரோனா பரி­சோ­தனை அறி­விக்கை கிடைத்த பிறகு அதைச் செய்­யத் தவ­று­வோருக்கு 2,000 ஹாங்­காங் டாலர் (S$345) அப­ரா­தம் விதிக்­கப்­படும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதன்­பி­ற­கும் ஒருவர் பரி­சோ­த­னைக்கு உட்­பட மறுக்­கும் பட்­சத்­தில் 25,000 ஹாங்­காங் டாலர் அப­ரா­த­மும் ஆறு மாதச் சிறைத் தண்­ட­னை­யும் விதிக்­கப்­படும் என அர­சாங்­கம் எச்­ச­ரித்துள்ளது.

பரி­சோ­தனை செய்­து­கொண்­ட­வர்­கள் முடிவு கிடைக்­கும் வரை வெளி­யில் செல்­லா­மல் வீட்­டி­லேயே இருக்க வேண்­டும் என்று அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

கொரோனா தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்டு, வரு­மான இழப்பு அபா­யத்தை எதிர்­நோக்­கும் ஹாங்­காங் குடி­மக்­க­ளுக்கு ஒரு­முறை மட்­டும் 5,000 ஹாங்­காங் டாலர் உத­வித்­தொகை வழங்­கப்­படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்­தி­னம் சனிக்­கிழமை நில­வ­ரப்­படி, ஹாங்­காங்­கில் 5,560 பேரை கொரோனா தொற்­றி­விட்­ட­தா­க­வும் அவர்­களில் 108 பேர் இறந்­து­விட்­ட­தா­க­வும் சின்­ஹுவா செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­தது.

ஹாங்­காங்­கில் கொரோனா பர­வல் மோச­ம­டைந்து வரு­வ­தால், சிங்­கப்­பூர்-ஹாங்­காங் இடையே நேற்று தொடங்­க­வி­ருந்த இரு­ தரப்­புப் பயண ஏற்­பாடு இரண்டு வாரங்­க­ளுக்­குத் தள்­ளி­வைக்­கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!