வூஹானில் WHO விசாரணைக் குழு: உறையவைக்கப்பட்ட உணவுப்பொருள் மூலம் கொவிட்-19 கிருமி பரவியிருக்கலாம்

வூஹானில் கொவிட்-19 கிருமிப் பரவல் தோன்றிய இடம் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமையிலான குழு, ‘கோல்ட் செயின்’ மூலம் கிருமிப்பரவல் நிகழ்ந்திருக்கலாம் என்று இன்று குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் அந்தக் குழு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளது.

‘கோல்ட் செயின்’ எனப்படும் உறையவைக்கப்பட்ட உணவு ஓரிடத்திலிருந்து மற்ற இடங்களுக்கு அனுப்பப்படும் நடைமுறையின்போது கிருமி பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இறக்குமதி செய்யப்பட்ட உறையவைக்கப்பட்ட உணவில் கொரோனா கிருமியின் துகள்கள் இருப்பதாக சீனா மீண்டும் மீண்டும் அறிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

“வூஹானில் காணப்படும் குளிரான, உறையவைக்கும் சூழல்களில் அந்தக் கிருமி வாழ முடியும் என்பது தெரியும். ஆனால் அது எப்படி மனிதர்களுக்குப் பாவியது என்பதை உண்மையில் புரிந்துகொள்ள முடியவில்லை,” என்று அந்தக் குழுவின் விலங்கு நோய்கள் நிபுணரான டாக்டர் பீட்டர் பென் எம்பரேக் குறிப்பிட்டார்.

உறையவைக்கப்பட்ட வனவிலங்கில் இருந்த கொரோனா கிருமி, உரிய சூழ்நிலையில் வெகுவாகப் பரவும் சாத்தியம் இருக்கிறதா என்பதை ஆராய்வது உசிதம் என்று டாக்டர் எம்பரேக் குறிப்பிட்டார்.

கொவிட்-19க்கு காரணமான கிருமி தோன்றிய இடத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில், அது வௌவால்கள் வசிக்கும் இயற்கை நீர்த்தேக்கமாக இருக்கலாம் என்றாலும் அது வூஹானில் இருப்பதற்கான சாத்தியம் குறைவு என்றார் அவர். வூஹானில்தான் முதலில் அந்தக் கிருமிப் பரவல் கண்டுபிடிக்கப்பட்டது.

பரவல் தொடங்கியதாக அறியப்பட்டதற்கும் முன்பிருந்தே அந்தக் கிருமி சுற்றிக்கொண்டிருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டாலும் அதனை உறுதிப்படுத்தும் ஆய்வுக்கு, ரத்த மாதிரிகள் தேவைப்படும் என்றார் அவர்.

கொவிட்-19 கிருமி ஆய்வகத்திலிருந்து பரவியிருக்கலாம் என்று முன்பு கூறப்பட்டதற்கு வாய்ப்பு மிகமிக குறைவு என்ற டாக்டர் எம்பரேக், அதன் தொடர்பில் கூடுதல் ஆய்வுகள் தேவையில்லை என்றார்.

மனிதர்களுக்கு அந்தக் கிருமியைப் பரப்பிய விலங்கைப் பற்றி விசாரணையில் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சீன சுகாதாரக் குழுவின் நிபுணர் டாக்டர் லியான் வானியன் குறிப்பிட்டார்.

கொவிட்-19க்கு காரணமான கிருமிப் பரவல் தொடங்கிய இடத்தைக் கண்டுபிடிக்க ஆண்டுக்கணக்கில் ஆகலாம் என அந்தக் குழுவின் மற்றொரு உறுப்பினரும் பரவக்கூடிய நோய்களுக்கான நிபுணருமான திரு டோமினிக் டையர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!