காபூல்: ஆப்கானிஸ்தானின் முக்கிய எல்லைப் பகுதி ஒன்றை தலிபான் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்துள்ளது. இதையடுத்து, தலிபானை அங்கிருந்து விரட்டியடிக்க ஆப்கான் அதிகாரிகள் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் உள்ள பல்வேறு போராளி அமைப்புகள் தலிபானுக்கு எதிராகப் போரிட ஆப்கான் அதிகாரிகளுக்கு உதவ முன்வந்துள்ளன.
ஆயுதம் ஏந்திய போராளிகள் தலிபானுக்கு எதிராக முழக்கமிட்டு போருக்குத் தயாராகி வருவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி வரும் நிலையில், அந்நாட்டின் பெரும்பாலான பகுதிகளை தலிபான் தனது கட்டுக்குள் கொண்டு வருகிறது.
ஆயுதங்களுடன் போராளிகள்.
படம்: ஏஎஃப்பி