இருபது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்

துபாய்: இரு­பது ஓவர் உலகக் கோப்பை போட்­டிக்­கான அட்­ட ­வ­ணையை ஐசிசி நேற்று அதி­கா­ரப்­பூர்­வ­மாக வெளி­யிட்­டது.

அதன்­படி அக்­டோ­பர் 17ஆம் தேதி முதல் நவம்­பர் 14ஆம் தேதி வரை துபாய், அபு­தாபி, சார்ஜா மற்­றும் ஓமா­னில் போட்டி நடை­பெ­றும்.

இதில் 16 நாடு­களை உள்ளடக் கிய மொத்­தம் 45 போட்­டி­கள் நடை­பெ­றும்.

முதல் சுற்­றில் (தகுதி சுற்று) எட்டு அணி­கள் விளை­யா­டும். இதில் இருந்து நான்கு அணி­கள் 2வது சுற்­றான 'சூப்­பர் 12' சுற்­றுக்கு முன்­னே­றும்.

இந்­தியா உள்­பட எட்டு நாடு­கள் நேர­டி­யாக 2வது சுற்­றில் நுழைகின்றன.

முதல் சுற்­றில் விளை­யா­டும் எட்டு அணி­களும் 2 பிரிவுகளாக பிரிக்­கப்­பட்­டுள்­ளன.

'ஏ' பிரி­வில் இலங்கை, அயர்­லாந்து, நமீ­பியா, நெதர்­லாந்து ஆகிய நாடு­களும் 'பி' பிரி­வில் பங்­ளா­தேஷ், ஓமான், ஸ்காட்­லாந்து, பாப்­புவா நியூ­கி­னியா ஆகிய நாடு­களும் இடம்­பெற்­றுள்­ளன. அக்­டோ­பர் 17ஆம் தேதி ஓம­னில் நடை­பெ­றும் தொடக்க ஆட்­டத்­தில் ஓமான்- பாப்­புவா நியூ­கி­னியா மோது­கின்­றன.

மற்­றொரு போட்­டி­யில் பங்­ளா­தேஷ்-ஸ்காட்­லாந்து அணி­கள் விளை­யா­டு­கின்­றன.

22ஆம் தேதி­யு­டன் முதல் சுற்று ஆட்­டம் முடி­வ­டை­கிறது. இரண்டு பிரி­வு­களில் இருந்­தும் முதல் 2 இடங்­களை பிடிக்­கும் அணி­கள் 2வது சுற்­றுக்கு தகுதி பெறும்.

'சூப்­பர் 12' ஆட்­டங்­கள் அக்­டோ­பர் 23ஆம் தேதி தொடங்­கு­கிறது. இதில் விளை­யா­டும் 12 அணி­களும் 2 பிரி­வுகளாக பிரிக்­கப்­பட்­டுள்­ளன.

இந்­தியா குருப்-2 பிரி­வில் இடம்­பெற்­றுள்­ளது.

பாகிஸ்­தான், நியூ­சி­லாந்து, ஆப்­கா­னிஸ்­தான் ஆகிய அணி­களும் அதில் உள்­ளன.

தகுதிச் சுற்­று 'பி' பிரி­வில் முதல் இடத்தை பிடிக்­கும் அணி­யும், 'ஏ' பிரி­வில் 2வது இடத்தை பிடிக்­கும் அணி­யும் குருப்-2 பிரி­வில் இடம்­பெ­றும்.

இந்­தியா- பாகிஸ்­தான் அணி­கள் அக்­டோ­பர் 24ஆம் தேதி மோது­கின்­றன. இந்த ஆட்­டம் துபா­யில் நடக்­கிறது.

இந்­திய அணி 2வது ஆட்­டத்­தில் நியூ­சி­லாந்­து­டன் 31ஆம் தேதி­யும் 3வது போட்­டி­யில் ஆப்­கா­னிஸ்­தா­னு­டன் நவம்­பர் 3ஆம் தேதி­யும் மோது­கிறது.

தகுதிச் சுற்று அணி­களை இந்­தியா, நவம்­பர் 5, 8ஆம் தேதி­களில் எதிர்­கொள்­கிறது.

குருப் 1 பிரி­வில் இங்­கி­லாந்து, ஆஸ்­தி­ரே­லியா, தென் ஆப்­ரிக்கா, வெஸ்ட்­இன்­டீஸ் ஆகிய அணி­களும் தகுதி சுற்­றில் இருந்து இரண்டு அணி­களும் (ஏ-1, பி-2) இடம்­பெற்­றுள்­ளன.

நவம்­பர் 8ஆம் தேதி­யு­டன் லீக் ஆட்­டங்­கள் முடி­கிறது.

இதன் முடி­வில் இரண்டு பிரி­வில் இருந்­தும் முதல் இரண்டு இடங்­களை பிடிக்­கும் அணி­கள் அரை இறு­திக்கு தகுதி பெறும்.

10 மற்­றும் 11 தேதி­களில் அரை இறுதி நடை­பெ­றும்.

இறு­திப்­போட்டி நவம்­பர் 14ஆம் தேதி துபா­யில் நடக்­கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!