இந்தோனீசியாவில் குறையும் தொற்று; கட்டுப்பாடுகள் தளர்வு

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வில் தொற்­றுக்கு ஆளா­வோர் எண்­ணிக்கை தொடர்ந்து குறைந்து வரும் நிலை­யில், சுலு, மலாங் உள்­ளிட்ட இந்­தோ­னீ­சி­யா­வின் பல இடங்­களில் நேற்று முதல் ஒரு வாரத்­திற்கு கொவிட்-19 கட்­டுப்பாடு­கள் தளர்த்­தப்­பட்­டுள்­ளன.

25% அல்­லது 30 பக்­தர்­

க­ளு­டன் வழி­பாட்­டுத் தலங்­கள் மீண்­டும் திறக்­கப்­பட அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்ளது.

அது போல் உண­வ­கங்­கள் 25 விழுக்­காடு, கடைத்­தொ­கு­தி­கள் பாதி விழுக்­காட்டு வாடிக்­கை­யா­ளர்­க­ளு­டன் செயல்­ப­ட­வும் அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது.

ஊழி­யர்­களை இரண்டு 'ஷிப்டு'­க­ளாக பிரித்து, தொழிற்­சா­லை­கள் முழு திற­னு­டன் இயங்­கு­வ­தற்கு அனு­மதி உண்டு.

இது­பற்றி பேசிய இந்­தோ­னீ­சிய அதி­பர் ஜோகோ விடோடோ, தொற்று உறுதி செய்­யப்­படும் விகி­தம் குறைந்­துள்­ள­தா­க­வும் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை 27 விழுக்­காடு குறைந்­துள்­ள­தா­க­வும் சொன்­னார்.

ஆனால், பெரு­ம­ள­வில் தடுப்­பூசி போடப்­பட்­டுள்ள நாடு­களும் கொரோனா தொற்­றின் அடுத்த அலையை எதிர்­கொண்டு வரு­வ­தைச் சுட்­டிய அவர், கிரு­மிப் பர­வ­லுக்கு எதி­ராக மக்­கள் எச்­ச­ரிக்­கை­யு­டன் இருந்து சுகா­தார நெறி­மு­றை­க­ளைக் கடை­பி­டிக்க வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்­தி­னார்.

நாட்­டில் தொற்­றுக்கு ஆளா­வோர் விகி­தம் 90.4 விழுக்­கா­டாக குறைந்­துள்­ள­தாக குறிப்­பிட்­டார் கொவிட்-19 அவ­ச­ரக்­கு­ழு­விற்­குப் பொறுப்பு வகிக்­கும் மூத்த அமைச்சர் ஒரு­வர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!