‘பெருந்தொற்று இன்னமும் இறுதிக்கட்டத்தை எட்டவில்லை’

ஜெனிவா: கொவிட்-19 பெருந்­தொற்று இன்­னும் அதன் இறு­திக்­கட்­டத்­தைக்­கூட நெருங்­க­வில்லை என்று உலக சுகா­தார நிறு­வ­னத் தலை­வர் டெட்­ரோஸ் அதா­னோம் கேப்­ரி­யே­சுஸ் கூறி­யுள்­ளார்.

வேக­மாக பர­வக்­கூ­டிய ஓமிக்­ரான் அபா­ய­மற்­றது என்று கூறப்­படு­வது பற்றி அவர் எச்­ச­ரித்­தார்.

செவ்­வாய்க்­கி­ழமை செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், "இந்­தப் பெருந்­தொற்று இன்­னும் இறு­திக்­கட்­டத்­தை­க்கூட எட்­ட­வில்லை," என்று சொன்­னார்.

கடந்த நவம்­ப­ரில் தெற்கு ஆப்­பி­ரிக்­கா­வில் ஓமிக்­ரான் கிருமி முதன்­மு­றை­யாக கண்­ட­றி­யப்­பட்டது.

இதற்கு முன்­னர் பர­விய திரிபு­களை­விட ஓமிக்­ரான் வேக­மா­கப் பர­வக்­கூ­டி­ய­தாக இருந்­தா­லும், அது கடு­மை­யான நோய்ப் பாதிப்பை ஏற்­ப­டுத்­து­வ­தா­கத் தெரி­ய­வில்லை.

என­வே­தான், பெருந்­தொற்­றுச் சூழ­லில் இருந்து, நிரந்­தர நோயாக கொவிட்-19 மாறு­கி­றதா என்ற விவா­தம் எழுந்­துள்­ளது.

ஆனால், அதி­க­மா­னோர் தொற்­றுக்கு ஆளா­கும்­போது, கடு­மை­யாக நோய்­வாய்ப்­ப­டு­வோர், மர­ண­ம­டை­வோர் எண்­ணிக்­கை­யும் அதி­க­ரிக்­கும் என்று உலக சுகா­தார நிறு­வனம் எச்­ச­ரித்­துள்­ளது.

ஓமிக்­ரான் பர­வ­லால் அதி­க­ரித்­துள்ள கொவிட்-19 பாதிப்பு, சில நாடு­களில் உச்­சத்தை எட்­டி­யி­ருப்­ப­தற்­கான அறி­கு­றி­கள் தென்­ப­டு­வ­தாக டாக்­டர் டெட்­ரோஸ் கூறி­னார்.

"இது, அண்­மைய தொற்று அலை­யின் மிக மோச­மான கட்­டம் ஒரு முடி­வுக்கு வரு­வ­தற்­கான நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­து­கிறது. என்­றா­லும், எந்­த­வொரு நாடும் ஆபத்­தை­விட்டு இன்­னும் வில­க­வில்லை," என்­றார் அவர்.

சில இடங்­களில் கொவிட்-19 கிரு­மி­யைக் கட்­டுக்­க­டங்­கா­மல் பர­வ­விட்­டால் புதிய, மேலும் ஆபத்­தான திரி­பு­கள் உரு­வெ­டுப்­ப­தற்­கான சாத்­தி­யம் அதி­க­ரிக்­கும் என்று சுகா­தார நிபு­ணர்­கள் எச்­ச­ரிக்­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!