பிலிப்பீன்ஸில் தடுப்பூசி மையத்திற்குச் சென்ற குழந்தைகளை அயன்மேன், கேப்டன் அமெரிக்கா போன்ற கற்பனை கதாபாத்திரங்கள் போல் உடையணிந்தவர்கள் மகிழ்வித்தனர்.
பொம்மலாட்டக் கலைஞர்களும் அங்கு நிகழ்ச்சிகளைப் படைத்தனர். அவர்களுக்கு பலூனில் பொம்மைகளும் கத்திகளும் செய்து தந்தனர் அந்த கற்பனை கதாபாத்திரங்கள்.
குழந்தைகளிடையே தடுப்பூசி திட்டத்தைப் பிரபலப்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் கூறினர்.
படம்: ஏஎஃப்பி