சீனாவில் நித்தம் உச்சம் காணும் தொற்று

‌ஷாங்­காய்: சீனா­வில் கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் நாளுக்கு நாள் அதி­க­ரித்து கொண்டே இருக்­கிறது.

அங்கு இது­வ­ரை­யில்­லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 20,472 பேருக்­குத் தொற்று உறுதி செய்யப்­பட்­டது.

‌‌ஷாங்­கா­யில் மட்­டும் 311 தொற்­றுச் சம்­ப­வங்­களும் 16,766 அறி­குறி­க­ளற்ற தொற்றுச் சம்பவங்களும் உறுதி செய்­யப்­பட்­டன.

தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­வர்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­து­வ­தற்­காக மிகப்பெரிய தற்­கா­லிக வசதி ஒன்று உருவாக்கப்பட்டு வருகி றது.

அனைத்­து­லக கண்­காட்­சி­கள் நடத்­தப்­படும் இடத்­தில் 40,000 பேர் வரை தனி­மைப்­ப­டுத்­த முடியும் என்று அதிகாரிகள் கூறி­னர்.

‌ஷாங்­காய் தவிர ஜிலின் பகுதி­யி­லும் கிரு­மிப் பர­வல் இன்­ன­மும் கட்­டுக்­குள் வர­வில்லை. சென்ற மார்ச் மாதம் முதல் அந்­ந­க­ரம் முடக்­க­நி­லை­யில் உள்­ளது.

அத்துடன் ‌ஷாங்­கா­யின் கிழக்குப் பகுதியை போலவே, மேற்குப் ­ப­கு­தி­யிலும் முடக்­க­நிலை மறு அறி­விப்பு வரும் வரை தொட­ரும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மற்ற மாநி­லங்­களில் இருந்து ‌ஷாங்­காய்க்கு உண­வுப் பொருள்­கள் வரு­வ­தா­க­வும் அவற்றை வீடு­களுக்­குக் கொண்டு சேர்ப்­ப­தில் பெரும் சிர­மங்­களை எதிர்­நோக்கு ­வ­தா­க­வும் ‌ஷாங்­காய் நகர துணை இயக்­கு­நர் லியு மின் சொன்­

னார்.

இதற்­கி­டையே, நக­ரத்­தின் பல்­வேறு குடி­யி­ருப்­புப் பகு­தி­களில் முகாம்­களை அமைத்து கொரோனா தொற்று பரி­சோ­த­னை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் நிலை­யில், முகாம்­கள் அமைக்­கப்­ப­டாத பகு­தி­ களில் இருப்­ப­வர்­கள் தாங்­க­ளா­கவே சுய பரி­சோ­தனை மேற்­கொள்ள அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!