கிருமித்தொற்றால் தவிக்கும் சீனா

பெய்­ஜிங்: நேற்­றைய நில­வ­ரப்­படி சீனா­வில் புதி­தாக 25,701 பேருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது.

கொள்­ளை­நோய்ப் பர­வல் தொடங்­கி­ய­தி­லி­ருந்து தற்­போது ஆக அதி­க­மான கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­களை சீனா எதிர்­கொண்டு வரு­கிறது. அந்­நாட்­டில் நடப்­பில் இருக்­கும் முடக்­க­நி­லை­யால் மில்­லி­யன் கணக்­கா­னோர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். சீனாவின் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை­யும் நெருக்­கு­தலுக்கு உள்­ளா­கி­யி­ருக்­கிறது.

புதிய கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­களில் 23,600 சம்­ப­வங்­கள் ஷாங்­காய் நக­ரில் பதி­வா­னவை. இந்த எண்­ணிக்கை, இந்­ந­க­ரம் தினசரி சராசரியில் இதுவரை எதிர்­கொண்­ட­தில் ஆக அதி­கம்.

இத­னைத் தொடர்ந்து ஒரே நேரத்­தில் பல­ருக்கு கொவிட்-19 பரி­சோ­த­னை­களை மேற்­கொள்­ளத் திட்­ட­மிட்­ட­தாக ஷாங்­காய் அறி­வித்­தது. குவாங்சூ நக­ரில் வாழும் 18 மில்­லி­யன் மக்­க­ளுக்­கும் பரி­சோ­த­னை­களை மேற்­கொள்­ளத் திட்­ட­மி­டப்­பட்­டது.

ஷாங்­கா­யில் ஒரு வாரத்திற்குக் கிரு­மித்­தொற்­று ஏற்படாேதார் வசிக்­கும் பகு­தி­களில் மக்­கள் வீடு­க­ளி­லி­ருந்து வெளியேற அனு­மதி கிடை­யாது. எனி­னும், மாற்­றி­ய­மைக்­கப்­பட்ட விதி­மு­றை­க­ளின்­படி ஒரு வாரத்­திற்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­படாத பகு­தி­களில் வசிப்­போர் வெளியே செல்லலாம். எனி­னும், அவர்­கள் அந்த வட்­டா­ரத்­தை­விட்டு வெளி­யே­றக்­கூ­டாது.

இரண்டு வாரங்­க­ளுக்கு யாருக்­கும் கிரு­மித்­தொற்று ஏற்­ப­டாத பகுதிகளில் வசிப்­போர் நட­மா­டு­வதற்­குக் கூடு­தல் நீக்­குப்­போக்கு உண்டு.

கொவிட்-19 கிரு­மிப் பர­வலை முற்றிலும் ஒழிக்­கும் எண்­ணம் கொண்ட ஓரிரு உலக நாடு­களில் சீனா­வும் ஒன்று. முடக்­க­நி­லையை அறி­வித்து கிரு­மித்­தொற்­றுக்­கு­ ஆளாகும் அனை­வ­ரை­யும் தனி­மைப்­ப­டுத்­தும் முயற்­சி­களை சீனா மேற்­கொண்டு வரு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!