பயண எச்சரிக்கையை விலக்கியது அமெரிக்கா

நியூ­யார்க்: அமெ­ரிக்­கா­வின் 'சிடிசி' எனும் நோய்க் கட்­டுப்­பாட்டு, தடுப்பு நிலை­யம், கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­படும் அபா­யம் அதி­கம் உள்ள நாடு­க­ளுக்­கான பட்­டி­ய­லி­லி­ருந்து எல்லா நாடு­க­ளை­யும் விலக்­கி­யுள்­ளது.

கொள்­ளை­நோய்ப் பர­வல் தொடங்­கி­ய­தி­லி­ருந்து கடந்த ஈராண்­டு­க­ளா­கப் பல நாடு­கள் அந்­தப் பட்­டி­ய­லில் சேர்க்­கப்­பட்டு வந்­தன.

புதிய மாற்­றத்­தின்­கீழ் கிருமிப் பர­வல் நில­வ­ரம் இருக்­கும் நாடு­களுக்கு மட்­டுமே நோய்க் கட்­டுப்­பாட்டு, தடுப்பு நிலை­யம் ஆக உய­ரிய எச்­ச­ரிக்­கை­யான நான்­காம் நிலை எச்­ச­ரிக்­கையை விடுக்­கும். சுகா­தா­ரக் கட்­ட­மைப்பு பெரும் நெருக்­க­டிக்கு உள்­ளா­கும் அள­விற்கு கிரு­மிப் பர­வல் மோச­மாக இருக்­கும் நாடு­கள், அள­வுக்கு அதி­க­மான கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­களை எதிர்­நோக்­கும் நாடு­கள் போன்­ற­வற்­றுக்கு மட்­டுமே நான்­காம் நிலை எச்­ச­ரிக்கை பொருந்தும்.

முன்னதாக ஒரு நாட்டில் பதிவாகும் புதிய கிருமித்தொற்று சம்பவங்களைக் கருத்தில்கொண்டு அதை பட்டியலில் சேர்ப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.

மேலும், அனைத்­து­லக விமானங்­களில் முகக்­க­வ­சம் அணி­வதைக் கட்­டா­யப்­ப­டுத்­தும் விதி­முறை­யைத் தளர்த்­து­மா­றும் அமெ­ரிக்க பய­ணச் சங்­க­மும் விமான நிறு­வ­னங்­களும் நோய்க் கட்­டுப்­பாட்டு, தடுப்பு நிலை­யம், அமெ­ரிக்க அதிபர் ஜோ பைடனின் அர­சாங்­கம் ஆகி­ய­வற்­றி­டம் வேண்­டு­கோள் விடுத்­துள்­ள­ன.

கொள்­ளை­நோய்ப் பர­வ­லின்­போது பெரி­தும் பாதிக்­கப்­பட்ட விமா­னச் சேவை­கள் மீண்­டு­வர உதவ இந்த வேண்­டு­கோள் விடுக்­கப்­பட்­டுள்­ளது.

முன்­ன­தாக அமெ­ரிக்­கா­வில் பொதுப் போக்­கு­வ­ரத்­துச் சேவை­களைப் பயன்­ப­டுத்­தும்­போது பயணி­கள் முகக்­க­வ­சம் அணி­வ­தைக் கட்­டா­யப்­ப­டுத்­தக்­கூ­டாது என்று நீதி­மன்­றம் ஒன்று தீர்­ப்ப­ளித்தது. இது, அமெ­ரிக்­கா­வில் உள்­நாட்டு விமா­னச் சேவை­க­ளைப் பயன்­படுத்து­வோ­ருக்­கும் பொருந்­தும்.

இதைத் தொடர்ந்து அந்­நாட்­டில் பல பய­ணி­கள் மிக­வும் மகிழ்ச்­சி­யடைந்­த­னர். கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ராக இருக்­கும் பாது­காப்பு குறை­வதை எண்ணி வேறு சிலர் வருத்­த­மும் தெரி­வித்­த­னர்.

நீதி­மன்­றம் தீர்ப்­ப­ளித்­த­வு­டன் விமான நிலை­யங்­கள், டாக்சி, பேருந்­துச் சேவை­களை வழங்­கும் நிறு­வ­னங்­கள் உள்­ளிட்­டவை முகக்­க­வச நிபந்­த­னை­களை நீக்­கின.

இந்­தத் தீர்ப்­புக்கு எதி­ராக அமெ­ரிக்க அர­சாங்­கம் மேல்­மு­றை­யீடு செய்­யக்­கூ­டும். கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த முகக்­க­வ­சம் அவ­சி­யம் என்று பொது சுகா­தார அதி­கா­ரி­கள் கருத்­து­ரைத்­தால் மேல்­மு­றை­யீடு செய்­யப்­படும் என்று அதி­பர் பைட­னின் அர­சாங்­கம் கூறி­யுள்­ளது.

அமெரிக்காவில் முகக்கவசம் அணிவதைக் கட்டாயப்படுத்தும் விதிமுறைகள் சர்ச்சைக்கு உள்ளாகி வந்துள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!